Connect with us
kamal

Biggboss Tamil 7

இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர்! போகும் போது என்ன சொல்லிட்டு போயிருக்காரு பாருங்க

BiggBoss Season: இறுதி கட்டத்தை எட்டிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகும் அந்தப் போட்டியாளர் பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வாரம் முழுவதும் பாசத்தின் பிணைப்பில் இருந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் இனி வரும் வாரங்களில் கடுமையாக விளையாட வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.

யார் அந்த டைட்டில் வின்னரை தட்டி தூக்குவார்கள் என்று யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு ஒருவருக்கொருவர் டஃப் கொடுத்து விளையாடி வருகிறார்கள். எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இருக்கும் போட்டியாளர்களை புரிந்து கொள்வது என்பது கடினமானதாகவே இருக்கிறது.

இதையும் படிங்க: இப்படியே மாத்தி மாத்தி வேலை செஞ்சிக்கிட்டு இருந்தா எப்படி? யார் பெருசுனு அடிச்சு காட்டுறது..!

ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து அவரவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி விட்டு போனார்கள். இந்த நிலையில் இன்று சனிக்கிழமை எபிசோடில் கமல் ஒரு சில விஷயங்களை பகிர்ந்திருப்பதாக சில செய்திகள் வெளியாகியிருக்கின்றது.

இன்றே ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. யார் அந்த போட்டியாளர் என மாயாவிடம் கமல் கேட்க, அதற்கு மாயா ‘இல்ல சார் என் ஃபேமிலி கூடவே போயிரலாம் என நினைத்தேன். அந்த அளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தேன்’ என்று கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: இப்பவும் கட்டழகு சூப்பராத்தான் இருக்கு!.. சினேகாவிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…

அதன் பிறகு விசித்ராவிடம் கமல் கேட்க ‘என் வீட்டார்கள் எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். அதனால் நான் இருக்க மாட்டேன்’ என சொன்னதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் பிறகே சரவணன் விக்ரம் எலிமினேட் என கமல் சொல்லியிருப்பதாக ஒரு சில தகவல் வெளியாகியிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இன்னிக்கு நீங்க இரண்டு பேரும் காப்பாற்றப்பட்டிருக்கிறீர்கள். நாளைக்கும் காப்பாற்றப் படுவீர்களா? என்று தெரியாது என கமல் ஒரு சஸ்பென்ஸையும் வைத்து விட்டு போயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என இன்று ஒளிபரப்படும் எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: விஜய் படத்துல நடந்த பாலிட்டிக்ஸ்! கோபப்பட்ட விஜய் ஆண்டனி – என்ன செய்தார் தெரியுமா?

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top