திடீரென கூப்பிட்டு ஒரு கோரிக்கை வைத்த மாஸ் ஹீரோ!... பதிலுக்கு ஷங்கர் கொடுத்த ஷாக்…
Shankar: இயக்குனர் ஷங்கர் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் பிஸியாகி இருக்கும் நிலையில் அவரிடம் ஒரு பிரம்மாண்ட நடிகர் வைத்த கோரிக்கையால் கொஞ்சம் ஜர்க் ஆனாலும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். அதற்கு பதிலாக இவரும் ஒரு கோரிக்கையை வைத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதை தான் கேம் சேஞ்சர். இப்படத்தினை ஷங்கர் இயக்கி வருகிறார். தில் ராஜூ இப்படத்தினை தயாரித்து இருக்கிறார். ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: எண்ட்ரிக்கு முன்னாடி இதை செய்ய திட்டமிடும் விஜய்!… அவர் கேரியரில் இதான் முதல்முறையாம்…
தேர்தல் ஆணையம் குறித்து தான் இப்படத்தின் கதை உருவாக இருக்கிறது. அப்பா மற்றும் மகன் என இரு வேடத்தில் சரண் நடிக்க உள்ளார். 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டத்தினை தாண்டி இறுதிக்கட்டத்தினை நெருங்கி இருக்கிறதாம்.
ஏப்ரல் 14ந் தேதி இப்படத்தினை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கும் நிலையில் ராம்சரண், இயக்குனர் ஷங்கரை அழைத்து ஆண்டி மோடி கருத்துக்களும், நரேந்திர மோடி குறித்தும் எதிராக எந்த ஒரு டயலாக்கும் படத்தில் இருக்கவே கூடாது என்பதை கொஞ்சம் அழுத்தமான கோரிக்கையாகவே வைத்து இருக்காராம்.
இதையும் படிங்க: ஐய்யயோ அந்த நடிகரா? வேணாம்.. பல பேர் சொல்லி தடுத்தும் துணிந்து நடித்த sms பட நாயகி
அதற்கு நீங்க ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும். பரபரப்பான விஷயம் நடந்தால் ஓகே. அப்படி இல்லை என்றால் பரவாயில்லை எனவும் ஷங்கர் கேட்டு இருக்கிறாராம். இதற்கு ராம்சரணும் சரியென கூறிவிட்டாராம்.