தளபதி ஷூட்டிங்கில் ஷோபனாவை கதற விட்ட மணிரத்னம்… 20 வயசுல கஷ்டம் தானப்பா..!
Thalapathy: மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த திரைப்படம் தளபதி. இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த பட ஹீரோயினுக்கு ஒரு கஷ்டத்தையுமே கொடுத்ததாக கூறி இருக்கிறார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷோபனாவும், மம்முட்டிக்கு ஜோடியாக பானுபிரியாவும் நடித்திருந்தனர். மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து இருந்தார். படத்தில் அத்தனை பாடல்களும் இன்று வரை ட்ரெண்ட் ரேஸில் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: இதுக்கு ஏன்டா நான் ஃபீல் பண்ணனும்.. மணிரத்னம் படத்தில் கஷ்டப்பட்ட ரஜினிகாந்த்..!
இத்தனை வரவேற்பை பெற்ற இப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் ஒரு விஷயம் நடந்ததாம். அதாவது ஹீரோயின் ஷோபனா இந்த ஒரே படத்தில் தான் அழுது இருக்கிறாராம். அதுவும் நிஜத்தில். ஏனெனில், மலையாள படத்தில் பிஸியாக அவர் நடித்து கொண்டு இருந்த சமயம்.
இரண்டு மலையாள ஷூட்டிங்கை முடித்து விட்டு நேராக தளபதி படத்துக்கு வந்து இருக்கிறார். பெரிய ஸ்டார்கள் மத்தியில் ஷோபனா நடித்து கொண்டு இருந்தாலும் வீட்டுக்கு போய் இரண்டு மாதம் ஆகிவிட்டதால் அவருக்கு ஒரு ஏக்கம் இருந்ததாம். 20 வயதே ஆனதால் குடும்பத்தை ரொம்பவே மிஸ் செய்து இருக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினி பட இயக்குனரை லாக் செய்த விஜய்!. தளபதி 69 பரபர அப்டேட்.. அப்ப ஹிட் கன்பார்ம்!..
சரி கால்ஷூட்டை முடித்து விட்டு வீட்டுக்கு செல்லலாம் என தன்னை ஷோபனா தேத்திக்கொண்டு நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் கொடுத்த கால்ஷூட்டே முடிந்து விட்டதாம். இருந்தும் ஷோபனாவின் காட்சிகள் மொத்தமாக முடியவில்லை. ஒவ்வொரு நாளும் நாளையுடன் முடிந்துவிடும் என்றே சொல்லப்படுமாம்.
ஒரு கட்டத்தில் நாளை வீட்டுக்கு போக வேண்டும் என ஷோபனா ட்ரெயின் டிக்கெட் எல்லாம் போட்டு விட்டார். ஆனால் இன்றும் கடைசி காட்சி எடுக்கப்படாமலே இருந்ததாம். அந்த நேரம் ஷோபனாவை பார்த்து மணிரத்னம் வந்து கொண்டு இருக்கிறார். இன்று அதே பல்லவி தான் என ஷோபனா நினைத்து இருக்கிறார்.
சரியாக அவர் நினைத்தது போல மணிரத்னம் சொல்ல அம்மணி கதறி அழுதே விட்டாராம். ஷூட்டிங் முடிந்து கிட்டத்தட்ட பேக்கப் டைம் என்பதால் பெரிய அளவில் அங்கு யாரும் இல்லையாம். அருகில் இருந்த மம்முட்டி மட்டும் பதறி என்னவென்று கேட்க ஊருக்கு போகணும் விஷயத்தை சொன்னாராம். அவரோ சப்பென்று இதுக்கா அழுகை எனக் கலாய்த்து விட்டாராம்.
இதையும் படிங்க: யாரும் இனிமே படத்தை பார்க்காதீங்க! அஜித்தை பற்றி பொங்கி எழுந்த தயாரிப்பாளர் - தல அப்படி என்ன செஞ்சாரு?