Sivakarthikeyan: அப்போ விஜய் இப்போ சிம்பு…சிவகார்த்திகேயனுக்கு போற இடமெல்லாம் பிரச்சனைதானா?

Published on: January 17, 2026
sivakarthikeyan
---Advertisement---

விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையின் மூலமே ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் மெரினா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வந்த 3 படத்தில் காமெடி வேடத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனின் நட்புக்காக தனுஷ் அவரை எதிர் நீச்சல் படம் மூலம்
நாயகனாக உருவாக்கினார். தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் காக்கிசட்டை படத்திலும் நடித்தார். ஒரு கட்டத்தில் தனுஷுடன் நட்பு முறிவு ஏற்பட்டது.

இந்த நிலையில் பொங்கலையொட்டி அவர் நடிப்பில் வெளிவந்த படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தோல்வியை தழுவியது. முன்னதாக விஜய் நடிப்பில், ஜனநாயகன் படத்துடன் இப்படம் வருவதாக இருந்தது. இதனை பலரும் விமர்சித்தனர். விஜய் கடைசி படம் என்பதால் சிவகார்த்திகேயன் தனது படத்தை சில நாட்கள் கழித்து வெளியிடலாமே என்று பலரும் கூறினர். இது சமூகவலைதளங்களில் விவாத பொருளாக மாறியது. விஜய் ரசிகர்களும் பராசக்தி படத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர்.

simbu

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சிவகார்த்திகேயன் மாநாடு படம் முதலில் என்னிடம்தான் வந்தது. ஆனால் நான்தான் சிம்பு பிரதர் இப்படத்திற்கு சரியானவராக இருப்பார் என்று இயக்குனரிடம் கூறினேன் என்று பேட்டி அளித்தார். இதனை பிடித்துக் கொண்ட சிம்பு ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.