Singam: நடிகர் சூர்யாவின் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த சிங்கம் படத்தின் நான்காம் பாகம் குறித்த அப்டேட்டை இயக்குனர் ஹரி தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம். இப்படத்தின் பாடல்கள் ஒருபக்கம் ஹிட் என்றால் படத்தின் வசனம் எல்லாம் தாறுமாறு ரகத்தில் வைரலானது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவானது. அனுஷ்கா இந்த பாகத்திலும் நடித்தார். ஆனால் இரண்டாம் நாயகியான அனுஷ்காவுக்கு முக்கிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: நான் ரஜினி கேரக்டரில் நடிக்கிறேன்.. அவரு காமெடி பண்ணட்டும்!.. கடுப்பான கவுண்டமணி!..
அதே கேரக்டரை கொண்டு வித்தியாச வில்லனை கொண்டு வந்தது கோலிவுட்டுக்கு புதிய முயற்சியாக இருந்தது. படமும் சூப்பர்ஹிட் வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் மூன்றாம் பாகத்தினை இயக்குனர் ஹரியே இயக்கி இருந்தார். அனுஷ்கா நாயகியாக இருக்க ஹன்சிகா இடத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து இருப்பார்.
மூன்றாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இதை தொடர்ந்து நான்காம் பாகம் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதன்பின் சூர்யாவின் பட லைன் அப்கள் தொடர்ச்சியாக அதிகரித்துவிட்டது. தற்போது கங்குவா படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். இதையடுத்து புறநானூறு திரைப்படம் துவங்க இருக்கிறது.
இதையும் படிங்க: செழியனுக்கு பொண்ணு பார்க்கும் ஈஸ்வரி… நீங்க போடுறது ப்ளேடுனு உங்களுக்கே தெரியுதா இல்லையா?
சூர்யா பாலிவுட்டிலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நேரத்தில் சூர்யாவின் சிங்கம் படத்தின் நான்காம் பாகம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், நான்காம் பாகத்தின் கேள்வி தான் நான் எங்கு போனாலும் கேட்கிறார்கள். அதற்கு நான் நிறைய உழைக்க வேண்டும்.
ஏற்கனவே முதல் மூன்று பாகம் வெற்றி அடையந்துவிட்டதால் அதன் வேலைகள் நிறைய இருக்கும். அது எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. காலம் தான் முடிவெடுக்க வேண்டும். இப்போதைக்கு அந்த ஐடியா இல்லை எனவும் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…