Connect with us

latest news

முத்து வாழ்க்கையில் என்னமோ பெரிசா நடந்து இருக்கும் போலயே!… அண்ணாமலையும் உடந்தையா?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ட்ரூத் ஆர் டார் விளையாட்டை தொடங்குகிறார் ஸ்ருதி. அப்போ ரவியிடம் உனக்கு கிரஸ் இருந்து இருக்கா கேட்க சின்ன வயதில் இருந்ததாக கூறுகிறார். பின்னர் ரவி மனோஜை கேட்க அவர் டாரை தேர்வு செய்கிறார்.

அவருக்கு 10 புஷ் அப் எடுக்க வேண்டும் என்கிறார் ரவி. ஆனால் மனோஜோ 5 மட்டுமே செய்து அவுட் ஆகிவிடுகிறார். ரவி ரோகினியை நீங்க லாஸ்டா சொன்ன பொய் என்ன அண்ணி எனக் கேட்கிறார். ஷாக்காகும் ரோகினி ஒரு பொய் அந்த சூழ்நிலையால தான் சொல்லப்படுது என குழப்புகிறார்.

இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் மணிரத்னம் – கமல்!.. அதிர வைக்கும் தக் லைவ் ஸ்பெஷல் வீடியோ..

மீனா சொன்னீங்களா இல்லையானு இல்லமா இப்படி குழப்புறீங்க என்கிறார். அடுத்து மீனாவிடம் உங்க ஆசை என்ன என்று கேட்கிறார் ஸ்ருதி தம்பி  நல்லா இருக்கணும். தங்கைக்கு நல்ல கல்யாணம் ஆகணும். நம்ம வீட்டு எல்லாரும் நினைக்கிறது நடக்கணும். ஒன்னா இருக்கணும் என்கிறார். உன் ஆசையை சொல்லுமா என்கிறார் அண்ணாமலை.

ஆனால் மீனா குழம்பி நிற்க அப்படி தனக்கு எதுவுமே இல்லை எனக் கூறி விடுகிறார். பாட்டி முத்துவை உன் மனசுல இருக்கத சொல்லுப்பா எனக் கேட்க உடனே மனோஜ் அவனை யாரும் கேள்வி கேட்கலை என்கிறார். ஆனால் அண்ணாமலை வாயை அடக்குகிறார். இது போல ஒரு பொங்கல் தினத்துல தான் என்னை இங்க வந்து விட்டுட்டு போனாங்க.

அம்மாவை பத்தி தான் கேட்டுக்கிட்டே இருப்பேன். நான் நடந்து போறப்ப விழுந்துட்டேன். அப்போ அம்மா என்னை தூக்கிட்டு போனாங்க. என் பிரண்ட் என்னை அடிச்சப்பா அம்மா வந்து சண்டை போட்டாங்க. அம்மா எனக்கு தெய்வமா தெரிவாங்க. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்னு ஆச்சு.

இதையும் படிங்க: கமல் படத்தில் வசமாக மாட்டிக்கொண்ட முழிக்கும் எஸ்.கே.. செம கடுப்பில் முருகதாஸ்!.. நடப்பது இதுதான்!..

நான் இப்போ அந்த உண்மையை சொல்ல போறேன் என மனோஜை பார்க்கிறார் முத்து. மனோஜ் அதிர்ச்சியாகி விட அண்ணாமலை இரும முத்து திரும்பி அவரை பார்க்கிறார். அண்ணாமலை வேண்டாம் என சைகை செய்து விடுகிறார். இதை மீனா பார்த்துவிட முத்து அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அவன் சொன்ன எதுவுமே நடக்கலை. அவன் ஆழ்மனசு ஆசை அதெல்லாம். அவன் நினைச்ச உண்மையை சொன்ன இப்ப இருக்க நிம்மதி இருக்காது என்று எழுந்து சென்றுவிடுகிறார்.

இவரும் உளரிட்டு போறாரு என விஜயா அதை அசட்டையாக எடுத்து கொள்கிறார். பின்னர் காலை எல்லாரும் சென்னை வீட்டுக்கு வந்துவிடுகின்றனர். இறங்கியதுமே மீனாவை கடையை திறக்க சொல்ல ஆமா ஷாப்பிங் மால் என்கிறார் விஜயா. ஆமா மீனா இப்போ இந்த தெருவுல பேமஸ் தான் என்கிறார் முத்து.

வீட்டுக்கு வந்த பின்னர் விஜயா ரோகினியை அழைத்து உன் மாமா வந்தது தான்மா சந்தோஷமே மனோஜுக்கு ப்ரேஸ்லெட்லாம் கொடுத்தாங்க. சிலர் நாக்கு மேல பல்லு போட்டு பேசுனாங்க என முத்துவை வம்பிழுப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: கமலுக்கு வந்த திடீர் ஆசை!.. சகலகலா வல்லவன் படத்துக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?!..

google news
Continue Reading

More in latest news

To Top