Connect with us
kamal

Cinema History

கமலுக்கு வந்த திடீர் ஆசை!.. சகலகலா வல்லவன் படத்துக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?!..

kamalhaasan: சினிமாவில் ஒரு கதையோ, ஒரு படமோ எப்படி உருவாகும் என சொல்லவே முடியாது. வருடக்கணக்கில் சிலர் கதை எழுதுவார்கள். சிலர். ஒரு ஒன்லைனை சொல்லி ஓகே செய்து விடுவார்கள். நடிகர் கமல் 5 வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர். ஏவிஎம் தயாரித்த ‘களத்தூர் கண்ணம்மா’ படம் மூலம்தான் அவர் நடிக்க துவங்கினார்.

சிறுவயது முதலே நடிப்பின் மீது அவருக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தது. 5 வயது சிறுவன் படப்பிடிப்பை இல்லையென்றால் என்ன செய்வான்?.. தன் வயதுடைய சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருப்பான். ஆனால், கமல் அப்படி இல்லை. ஏவி மெய்யப்ப செட்டியார் அலுவலகத்தில் இருக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தான் தயாரித்த படங்களை எடுத்தவரை போட்டு பார்த்துகொண்டிருப்பார்.

இதையும் படிங்க: விஜயகாந்தை குடிகாரன்னு சொன்னா எவனா இருந்தாலும் அடிப்பேன்!.. சீறும் தியாகு!..

கமல் அவருடன் அமர்ந்து அந்த படங்களை பார்ப்பாராம். அங்கு இல்லையெனில் எடிட்டிங் அறையில் இருப்பாராம். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது கமல் விஷயத்தில் சரியாக பொருந்தும். அதன்பின் டீன் ஏஜ் வந்தபின் தங்கப்பன் என்கிற நடன இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்தார். அதன்பின் உணர்ச்சிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

அப்போதுதான் ஜெமினி கணேசன் ஒருமுறை பாலச்சந்தரை பார்க்கபோன போது கமலை உடன் அழைத்து சென்று கமலை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின்னர்தான் கமலை தனது படங்களில் நடிக்க வைத்தார் பாலச்சந்தர். அவர்கள், அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சி, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் கமல் பிரபலமானார்.

இதையும் படிங்க: கமல் படத்தில் வசமாக மாட்டிக்கொண்ட முழிக்கும் எஸ்.கே.. செம கடுப்பில் முருகதாஸ்!.. நடப்பது இதுதான்!..

80களில் பல படங்களில் நடித்துகொண்டிருந்தபோது திடீரென கமலுக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. ஏவிஎம் சரவணனிடம் சென்று இதுபற்றி பேசினார். ஏற்கனவே கமல் நடித்த சட்டம் என் கையில் படத்தை ஹிந்தியில் எடுப்பது என் முடிவானது. கமலும் கால்ஷீட் கொடுத்தார்.

ஆனால், சில காரணங்களால் அந்த படத்தை எடுக்க முடியவில்லை. கமலின் கால்ஷீட் இருந்ததால் ஒரு தமிழ் படத்தை எடுப்போம் என முடிவு செய்தார்கள். தலைப்பு கமலை பெருமைப்படுத்துவது போல் சகலகலா வல்லவன் என வைத்துவிட்டார்கள். அதன்பின் எஸ்.பி.முத்துராமனை அழைத்து கதையை உருவாக்க சொன்னார்கள். அப்படி உருவான திரைப்படம்தான் சகலகலா வல்லவன். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் மணிரத்னம் – கமல்!.. அதிர வைக்கும் தக் லைவ் ஸ்பெஷல் வீடியோ..

google news
Continue Reading

More in Cinema History

To Top