Categories: latest newstelevision

வேற எதாச்சும் மாத்துங்கப்பா… செம மொக்கையா போகுது… காத்திருக்கும் சிறகடிக்க ஆசை ரசிகர்கள்…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ரூமில் முத்து கோபமாக அமர்ந்து இருக்கிறார். அப்போ அங்கு வரும் மீனாவிடம் உங்க வீட்டுக்கு போனீயா எனக் கேட்க அவரும் ஆமாம் என்கிறார். நான் உன்னை உன் தம்பிக்கு அட்வைஸ் பண்ண சொன்னேனா எனக் கேட்கிறார்.

மீனா இல்லையே நானே தான் செஞ்சேன் எனக் கூற பின்ன எதுக்கு உன் தம்பி என்னிடம் வந்து அப்படி பேசிவிட்டு போகிறான். இதைக் கேட்ட மீனா சத்யா உங்களை பார்க்க வந்தானா எதற்காக பார்க்க வந்தான் என கேட்கிறார். அதை போய் உன் தம்பியிடமே கேள். இனி நீ வீட்டுக்கு செல்ல கூடாது என முத்துக்கு கூறிவிடுகிறார்.

இதையும் படிங்க: மாமனார் பட நடிகையை ஜோடியாக்கிய தனுஷ்!.. ராயன் படத்துல இவர்தான் ஹீரோயினாம்!..

அப்போ அம்மா சீதாவை எப்படி பார்ப்பது என மீனா கேட்க அவர்களை இங்கே வரச் சொல்லிப் பார் இல்லை கோவிலுக்கு சென்று பார் ஆனால் உன் தம்பி இருக்கும் வீட்டுக்கு இனி நீ செல்லக் கூடாது என்மேல் உனக்கு கொஞ்சமாவது மரியாதை இருந்தால் இந்த விஷயத்தில்  என் பேச்சைக் கேள் எனக் கூறிவிட்டு செல்கிறார் முத்து.

மீனா போனை எடுத்துக் கொண்டு போய் சத்யாவுக்கு கால் செய்து எதற்காக மாமாவிடம் போய் அப்படி பேசினாய் என கேட்கிறார். சத்யாவோ நீ அதை போய் உன் புருஷன் கிட்டயே கேள் என கூறி விடுகிறார். இப்பொழுது என்னை மாமா வீட்டுக்கு வரக்கூடாது என கூறிவிட்டதாக மீனா சொல்ல அப்போ உன் புருஷன் பேச்சையே கேள்.

இனி வீட்டுக்கு வராதே. எனக்கு குடும்பத்தை பார்த்துக் கொள்ளத் தெரியும். எனக்கு எது பிடிக்குதோ அதைத்தான் நான் செய்வேன் யார் பேச்சையும் கேட்க முடியாது எனக்கூறி சத்யா போனை வைத்து விடுகிறார். பின்னர் ரவியும் ஸ்ருதியும் ரூமில் அமர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் படத்துக்கு வெளிநாட்டில் என்னவொரு மவுசு!.. அட அந்த ஹீரோ பெயரை எல்லாம் சொல்றாங்களே!..

அப்போ ஸ்ருதியின் அம்மா கால் செய்ய ரவி வர மாட்டேன் என கூறிவிட்டான். நீங்களே அந்த ட்ரிப்புக்கு சென்று வாங்க. இவன் சம்பளத்தில் போக வேண்டுமென்றால் கட்டுமரத்தில் தான் போக வேண்டும் என கலாய்க்கிறார். ஸ்ருதி போனை வைத்துவிட உனக்கும் என் மீது நம்பிக்கை இல்லை என ரவி வருத்தப்பட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

பின்னர் மனோஜ் விஜயாவிடம் காசு இருக்குமா என கேட்கிறார். எதுக்கு என்று விஜயா கேட்க இன்டர்வியூ செல்லும் விஷயத்தை கூறுகிறார். அதான் நீ ஒரு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாயே என விஜயா கேட்க அதை விட்டுவிட்டேன் என்கிறார் மனோஜ். இதனால் அதிர்ச்சியாகும் விஜயா உனக்கு இன்டர்வியூ வியாதி பிடித்திருக்கிறது என திட்டுகிறார்.

தன்னிடம் காசு இல்லை என விஜயா கூறி விட மனோஜ் அண்ணாமலை பையில் இருந்து 300 ரூபாயை சுட்டு விடுகிறார். பின்னர் அண்ணாமலை வெளியில் கிளம்ப தன் பாக்கெட்டில் பணம் இல்லாததை பார்த்து விஜயாவிடம் கேட்க அவருக்கு மனோஜ் எடுத்துவிட்ட விஷயம் தெரிகிறது. உடனே உங்களுக்கு வயசாகிட்டு அதனால் மறந்து இருப்பீங்க என சமாளித்து விடுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: கோபி ஒரு அழுகையை போட்டு எல்லாரையும் கப்சிப்னு ஆக்கிட்டீங்களே… வெவரம் தான்

Akhilan

Recent Posts

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 minutes ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

6 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

7 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

7 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

7 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

10 hours ago