கேட்கிறதெல்லாம் சரிதான்… ஆனா ரோகிணி தான ஜெயிக்கிறாங்க… என்னங்க டைரக்டர் ஐயா!

by Akhilan |
கேட்கிறதெல்லாம் சரிதான்… ஆனா ரோகிணி தான ஜெயிக்கிறாங்க… என்னங்க டைரக்டர் ஐயா!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் என் பேருல 15 லட்சம் பணம் வந்து இருக்கு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதில் சந்தேகமாகும் முத்து உன் அக்கவுண்ட்ல ஏன் வரணும். அண்ணாமலையிடம் திரும்பியவர், அப்பா நீ காசு கொடுத்தா யார் அக்கவுண்டுல கொடுப்பீங்க என்கிறார்.

உன்னோடதுல தான். மீனாவிடம் இதையே கேட்ட எங்கம்மாவும் என்னோடதுல தான் தருவாங்க என்கிறார். ஸ்ருதியிடம் கேட்க அவரும் அதையே சொல்கிறார். அப்புறம் ஏன் பார்லர் அம்மாவோட அப்பா மட்டும் இவன் அக்கவுண்டுல தந்தாங்க என்கிறார்.

இதையும் படிங்க: வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே பெரிய பிரச்சனை இருக்கு!.. சந்துல சிந்து பாடிய பிரபலம்!..

இதையடுத்து, விஜயா மனோஜை பார்த்து உன் அக்கவுண்ட்லயா பணம் வந்துச்சு எனக் கேட்க ஆமாம் என்கிறார். உடனே ரோகிணி, பிசினஸ் செய்ய போறாரு. அப்போ பிரச்னை வராம இருக்கணும்ல எனக் கூறுகிறார். உடனே விஜயா சரித்தான். இந்த முத்து பொறாமையில் பேசுறான் என்கிறார்.

ரூமுக்கு வரும் ரோகிணி, மனோஜை பிடித்து திட்டுகிறார். உன் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? முதல்ல இந்த முத்துவை அடக்கணும் என்கிறார். நம்ம என்ன செய்ய என மனோஜ் கேட்க மீனா தான் அதுக்கு சரி எனக் கூறி வெளியில் வருகிறார் ரோகிணி. இதையடுத்து மீனாவிடம் செல்லும் ரோகிணி, காசு எந்த அக்கவுண்ட்ல வந்தா முத்துக்கு என்ன? எதுக்கு தேவையில்லாம பேசுறாரு என்கிறார்.

உங்க விஷயத்துல நாங்க தலையிடுறோமா என ரோகிணி கேட்க அன்னைக்கு கார் விஷயத்துல இப்படித்தான கேள்வி கேட்டீங்க என்கிறார். இனிமே உங்க விஷயத்துல நாங்க தலையிடல. எங்க விஷயத்துக்கு நீங்க வரக்கூடாது என்கிறார். இதையடுத்து முத்துவை அழைக்கும் மீனா நீங்க ஏன் அவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கிறீங்க என்கிறார். தப்பு நடந்தா தட்டி கேட்கணும் என பாட்டி சொன்னதாக கூறுகிறார்.

இதையும் படிங்க: வரிசையா படங்களை முடித்துத் தள்ளும் கீர்த்தி சுரேஷ்!.. விஜய் அட்மின் படமும் ரெடியாகிடுச்சாம்!..

அதே பாட்டி தான் வீட்டுக்குள்ள ஒத்துமையா இருக்க சொல்லி இருக்காங்க. நீங்க ஏன் தேவையே இல்லாம பேசுறீங்க எனக் கேட்க ரோகிணி எதுவும் சொன்னாங்களா எனக் கேட்டு சண்டைக்கு போக அதெல்லாம் இல்லை. இப்போ நீங்க வேலைக்கு போங்க என அனுப்பி விடுகிறார். பின்னர் வித்யாவிடம் நடந்த விஷயங்களை கூறி சந்தோஷமாக வருகிறார் ரோகிணி.

அப்போ வசிகரன் வந்து காசு கேட்க மனோஜிடம் இருந்து காசு வாங்கி கொடுத்து சமாளிக்க முடிவெடுக்கிறார். பின்னர் வீட்டுக்கு வரும் ரோகிணி, மனோஜிடம் என்ன செய்ற எனக் கேட்க பெரிய பணக்காரங்க என்ன பிசினஸ் செஞ்சாங்க எனப் பார்த்துகொண்டு இருப்பதாக கூறுகிறார்.

புதுசா எதுவும் செய்யணும் எனக் கூற பார்க் பிரண்ட் வட்டிக்கு விட சொன்னதாக கூறுகிறார். தன்னுடைய பிரச்னைக்கு இது தான் சரியான ஐடியாவா இருக்கும் என நம்பும் ரோகிணி 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து ஒருலட்சத்தினை வாங்கி கொள்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: ரஜினிகாந்துக்கே இந்த நிலைமையா!.. ’கூலி’ படத்தை ஆரம்பத்திலேயே காலி பண்ண முடிவெடுத்த இளையராஜா?..

Next Story