முத்துக்கு எண்ட் கார்ட் போட நினைத்த சிட்டி… தனி ஆளாக காப்பாற்றிய மீனா… வெறுப்பில் விஜயா அண்ட் கோ…

by Akhilan |
முத்துக்கு எண்ட் கார்ட் போட நினைத்த சிட்டி… தனி ஆளாக காப்பாற்றிய மீனா… வெறுப்பில் விஜயா அண்ட் கோ…
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் முத்து, மீனா, ரவி ஆகியோர் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். அவரை உட்கார சொல்லும் இன்ஸ்பெக்டர் டீ வாங்கிட்டு வர சொல்கிறார். அடுத்த மீனாவின் வீர செயலை பாராட்டுகிறார். முத்துவிடம் உனக்கு கிடைச்சா பொண்டாட்டி மாதிரி யாருக்குமே கிடைக்க மாட்டாங்க என்கிறார்.

முத்து தன்னுடைய காரை கேட்க எடுத்துக் கோப்பா. இதோட இந்த பிரச்சனையை முடிச்சுக்கலாம் என்கிறார். அதைத்தொடர்ந்து அவனைக் கூப்பிட்டு வாங்க என சிட்டியை அழைத்து வருகின்றனர். இவனிடமிருந்து உனக்கு நஷ்டஈடு ஒரு லட்சம் வாங்கி கொடுத்துறேன் என்கிறார் இன்ஸ்பெக்டர்.

இதையும் படிங்க: தூள் கிளப்பிய கவின்.. வேறலெவல் நடிப்பு.. ஆனால், அந்த பிரச்சனை இருக்கு ?..’ஸ்டார்’ விமர்சனம் இதோ!

ஆனால் முத்து அதெல்லாம் எனக்கு வேணாம். இவனே கொள்ளைக்காரன். இவன் மேல கேஸ் போட்டு உள்ள தள்ளுங்க. இதுக்கு மேல இப்படி யாரும் செய்வதற்கு பயப்படனும் என்கிறார். இதனால் இன்ஸ்பெக்டர் சிட்டி மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்ய சொல்கிறார். மீனா, ரவி, முத்து மூவரும் சேர்ந்து காரை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்புகின்றனர். அண்ணாமலை வீட்டில் இருப்பவர்களை அழைத்து முத்துவின் வீடியோவை போட்டுக்காட்டுகிறார்.

இதை பார்க்கும் மனோஜ் இதுவும் அவன் செட்டப்பா இருக்கும் என்கிறார். உடனே விஜயா செஞ்சாலும் செய்வான் எனக் கூறுகிறார். அவன் தப்பு செஞ்சுட்டான்னு சொல்லும்போது உடனே நம்பாதீங்க. நம்ம மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அவனையே குறை சொல்றீங்க என்கிறார் அண்ணாமலை. இதை எடுத்து வீட்டுக்கு வரும் முத்துவிற்கு விஜயாவை ஆரத்தி எடுக்க சொல்கிறார் அண்ணாமலை.

அதெல்லாம் என்னால முடியாது என விஜயா கூற, முடியுமா முடியாதான்னு கேக்கல செய்யணும் என்கிறார். இதை தொடர்ந்து வீட்டுக்கு வரும் முத்து மற்றும் மீனாவிற்கு ஸ்ருதி மற்றும் ரோகிணி இணைந்து ஆரத்தி எடுக்கின்றனர். முத்துவிடம் என்னை மன்னித்து விடுடா என்கிறார் அண்ணாமலை. மன்னிப்பெல்லாம் எதுக்குப்பா கேட்கிறீங்க. உனக்கு என் மேல கோவம் இருந்தா என்ன அடிச்சிரு.

இதையும் படிங்க: விஜயகாந்த் வில்லனாகக் கெத்து காட்டிய படங்கள்… டாங்லீக்கே முன்னோடியாக இருந்த கேப்டன்!

ஆனா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதப்பா என்கிறார். பின்னர் விஜயாவிடம் செல்லும் மீனா, என் புருஷன் குடிக்கவே இல்ல. அப்போ என்ன குடிகாரன் பொண்டாட்டின்னு சொல்ல மாட்டாங்களே என பதிலடி கொடுக்கிறார். ரோகிணியிடம் செல்லும் மீனா, நான் சரியா கவனிக்கலைனு தான் அவர் இப்படி இருக்காருனு சொன்னீங்க. அவர் தப்பே பண்ணலை என மூக்குடைக்கிறார். அன்னைக்கு குடிக்கலை என்னமோ உன் புருஷன் குடிக்காத மாதிரி பேசுற என ரோகிணியை இழுத்துக்கொண்டு ரூமுக்குள் செல்கிறார்.

சிட்டியை போலீஸ் ஸ்டேஷனில் பார்க்க வரும் சத்யாவிடம் உங்க மாமா உனக்கே அட்வைஸ் பண்ணிட்டு டாஸ்மாக்கில் இருப்பதை காட்டுவதற்காக தான் அந்த வீடியோவை எடுத்தேன். என்கூட இருந்த பன்னாட எதுவோ அதை வெளியிட்டானுங்க என்கிறார். யார் நம்மளனாலும் நீ என்ன நம்பணும் என்கிறார். நான் வர வரைக்கும் என் இடத்துல நீ தான் இருக்கணும் சத்யா என சிட்டி கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: முதல் பிளாக்பஸ்டர்!.. தமன்னா பண்ண புண்ணியத்தால் தப்பித்த தமிழ் சினிமா!.. 7 நாள் வசூல் எவ்வளவு?

Next Story