கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் எழுந்த மோதல்!.. படத்திலிருந்து விலகிய சிவாஜி!...

by சிவா |
kannadasan
X

நடிகர் சிவாஜி, கலைஞர் கருணாநிதி, கண்ணதாசன் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வளர்ந்தவர்கள்தான். கண்ணதாசன் கதாசிரியர், பாடலாசிரியர், வசனகர்த்தா என அறியப்பட்டார். அதேபோல்தான் கலைஞர் கருணாநிதியும் கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக வளர்ந்தார்.

சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்திற்கு கதை, வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதி. அதேபோல், கண்ணதாசன் முதன் முதலாக கதை, வசனம் எழுதிய இல்லற ஜோதி படத்தின் ஹீரோ சிவாஜிதான். கண்ணதாசன் அடிக்கடி கோபப்பட்டு எல்லோரையும் பகைத்துக்கொள்வார். அப்படி அவர் கலைஞர் கருணாநிதியிடம் மோதியதால் ஒரு படத்திலிருந்து சிவாஜி விலகியது பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

இதையும் படிங்க: என்னை கைகாட்டி சிவாஜி பேசியதும் அப்படியே ஷாக் ஆயிட்டேன்… ரமேஷ் கண்ணா கொடுத்த ஆச்சரிய தகவல்

இல்லற ஜோதி படம் உருவானபோதே கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இதற்கிடையில் கலைஞர் எழுதிய ஒரு கதையை வைத்து ‘சுகம் எங்கே’ என்கிற படத்தை துவங்கினார் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம். இந்த படத்திற்கு வசனம் எழுதும் பணியை கண்ணதாசனுக்கு கொடுத்தார் சுந்தரம். ஹீரோ சிவாஜி என முடிவானது.

ஆனால், தனது கதைக்கு கண்ணதாசன் எழுதுவது கலைஞருக்கு பிடிக்கவில்லை. இதுபற்றி அவர் டி.ஆர்.சுந்தரத்திடம் பேசியபோது ‘நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன். இந்த படத்திற்கு கண்ணதாசன்தான் வசனம் எழுதுவார்’ என சுந்தரம் சொல்லிவிட்டார். இப்படி கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே இருந்த மோதலை பார்த்த சிவாஜி ‘இந்த படத்தில் நடித்தால் நமக்கு சிக்கலாக முடியும்’ என நினைத்து அப்படத்திலிருந்து விலகிக்கொண்டார்.

இதையும் படிங்க: அந்தப் படத்துல நடிச்சதுக்கு மக்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? வேதனையில் சிவாஜி.. இதெல்லாம் நடந்திருக்கா

எனவே, கே.ஆர்.ராமசாமியை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தார். கண்ணதாசன் வசனம் எழுத அந்த படமும் உருவானது. கலைஞர் எழுதிய அந்த கதை A solder's wife என்கிற ஆங்கில நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. அதனால், கலைஞரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஆனாலும் நம்மை விட்டுவிட்டு படம் எடுக்கிறார்களே என்கிற கோபத்தில் அதை ராஜா - ராணி கதையாக மாற்றி அதற்கு அம்மையப்பன் என தலைப்பு வைத்தார்.

ஹீரோவாக எஸ்.எஸ்.ராஜேந்திரனும், கதாநாயகியகா ஜி.சகுந்தலாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இப்படத்தை பீம்சிங் இயக்கினார். கண்ணதாசன் வசனத்தில் உருவான சுகம் எங்கே, கலைஞரின் வசனத்தில் உருவான அம்மையப்பன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியானது. ஆனால், இரண்டுமே வெற்றிப்படங்களாக அமையவில்லை.

இதையும் படிங்க: நடிக்காமல் போன அந்த நாடகம்!.. சிவாஜிக்கு அந்த பெயர் வர காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்!..

Next Story