தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்த சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

sivakarthikeyan

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சின்னதிரையிலிருந்து வந்து வெள்ளி திரையில் பெரிய இடத்தை தொட்டவர்களில் இவரும் ஒருவர். தற்போது சிவகார்த்திகேயன் தாய்கிழவி வெற்றிபடத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசன் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்ப்பில் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது மட்டுமின்றி எஸ்.கே. புரொடெக்சன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் சிவகார்த்திகேயன். இன்று மரியாதை நிமிர்த்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் விழாவில் கலந்துகொள்வது தொடர்பாகவும் திரு சிவகார்த்திகேயனை எழுத்தாளர்கள் சங்கத்தலைவர் திரு சேரன், பொதுச்செயலாளர் திரு பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் திரு சுந்தர்ராஜன், துணைத்தலைவர் திரு சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இயக்குனர் திரு செல்வபாரதி, இயக்குனர் திரு KBB நவீன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர்களின் முன்னிலையில் பாடலாசிரியராக இணைந்ததோடு அல்லாமல் சங்கத்திற்காக சில ஆலோசனைகளும் வழங்கினார்.

விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட அடித்த அரபி குத்து பாடலை சிவார்த்திகேயன் எழுதியதான் என்பது குறிப்பிடத்தக்கது.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →