தனுஷும், சிவகார்த்திகேயனும் எப்படி வேணா இருக்கட்டும்… நாங்க நண்பர்களென நிரூபித்த D56 SK27 இயக்குநர்கள்!
ஒரே நாளில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரின் புதிய படமும் துவங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் லிஸ்ட்டில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்குமே இடம் உண்டு. ஆரம்பத்தில் சிவாவை தன்னுடைய ‘3’ படத்தில் நடிக்க வைத்ததோடு நிற்காமல், தன் தயாரிப்பில் ‘எதிர் நீச்சல்’ படத்தில் ஹீரோவாக்கியும் அழகு பார்த்தவர் தான் தனுஷ்.
அப்புறம் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் தனுஷின் ‘D56’ படமும், சிவகார்த்திகேயனின் ‘SK27’ படமும் பூஜையுடன் ஷூட்டிங்கை துவங்கியுள்ளனர்.
தற்போது, ‘D56’ படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எக்ஸ் தளத்தில் ‘SK27’ அறிவிப்பு போஸ்டரை ஷேர் செய்து “ஒரு வழியாக ராம் வந்துவிட்டான். ரொம்ப ஹேப்பி” என்று அப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்காக ட்வீட் போட்டுள்ளார்.
அதற்கு ‘SK27’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் “இன்னைக்கு என் படத்தோட ஷூட் இருந்தனால உங்க படத்தோட பூஜைக்கு வர முடியல. உங்க படமும் இன்னைக்கு ஆரம்பிக்கிறதுல எனக்கும் ஹேப்பி தான். கலக்குங்க” என்று பதிவிட்டுள்ளார்.












