படிக்காதன் படத்தில் பஞ்சாயத்து!.. பல வருடங்களுக்கு பின் வடிவேலுவுடன் இணையும் தனுஷ்!..

தனுஷும், வடிவேலும் இணையாத கதை..

dhanush vadivelu

துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவன் தனுஷ். அதன்பின் காதல் கொண்டேன், திருடா திருடி எனத் தொடர் ஹிட் படங்களை கொடுத்து கவனிக்கத்தக்க நடிகராக மாறினார். ஒரு பக்கம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களிலும், மறுபக்கம் கமர்சியல் மசாலா திரைப்படங்களிலும் நடிப்பது தனுஷின் ஸ்டைல். வெற்றிமாறன் இயக்கிய படங்களில் நடித்து தேசிய விருதுகளையும் வாங்கினார். கேப்டன் மில்லர் படத்தில் நடித்ததற்காக சமீபத்தில் அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது..

தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷின் அடுத்த படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே லப்பர் பந்து படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர். இந்நிலையில்தான் அதற்கான பூஜை இன்று நடைபெற்றது.

இந்த பூஜை தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் தனுஷுடன் ப்ரீத்தி முகுந்தன். எஸ்.ஜே சூர்யா, வடிவேலு ஆகியோர் நின்று கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த படத்தில் அவர்கள் முக்கிய கதாபாத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது..

எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே ராயன் படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார். ஆனால், வடிவேலுவை பொறுத்தவரை தனுசுடன் இதுவரை ஒரு படத்தில் கூட அவர் நடிக்கவில்லை. பல வருடங்களுக்கு முன் சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படிக்காதவன் திரைப்படத்தில் வடிவேலு நடித்தார்.

சில காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட நிலையில் அந்த படத்திலிருந்து வடிவேலு வெளியேறினார். ஒரு காட்சியில் இயக்குனர் சொன்னதை கேட்காமல் வடிவேலு ஒன்றை செய்ய அருகில் இருந்த தனுஷ் ‘டைரக்டர் என்ன சொல்றாரோ அதை செய்ங்கண்ணே’ என்று சொல்ல கோபமடைந்த வடிவேலு ‘எப்படி நடிக்கணும்னு நீ எனக்கு சொல்லி தரியா?’ என கோபப்பட்டு அந்த படத்திலிருந்தே வெளியேறினார்.

அதன்பின் அந்த கதாபாத்திரத்தில் விவேக் நடித்திருந்தார். தற்போது பழசையெல்லாம் மறந்து தனுஷும், வடிவேலும் ஒன்றாக இணைந்திருக்கிறார்கள்.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →