சிம்புவுக்கு வடபோச்சே!.. சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கயாடு லோஹர்!..

சிம்புவுக்கு கிடைக்க வேண்டிய கயாடு லோஹர் கூட்டணி இப்போ சிவகார்த்திகேயனுக்கு போய்விட்டது.

sk

பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அடுத்து சிம்பு தான் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோஹரை எல்லாம் கமிட் செய்து பூஜையும் இன்றைக்கு போட்டதை போல போட்டனர்.

ஆனால், ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அவரது பெயர் அடிபட்ட நிலையில், அந்த படம் அப்படியே டிராப் ஆனது. பார்க்கிங் படத்தின் மூலம் தேசிய விருது அங்கீகாரம் கிடைத்த இயக்குநரின் அடுத்த படம் இப்படி ஆகிப்போச்சே என பலரும் நினைத்த நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது அந்த படத்தை டேக் ஓவர் செய்துக் கொண்டார்.

சிம்புவுக்கு கிடைக்க வேண்டிய கயாடு லோஹர் கூட்டணி இப்போ சிவகார்த்திகேயனுக்கு போய்விட்டதே என சிம்பு ரசிகர்கள் ஆன்லைனில் ரொம்பவே ஃபீல் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கயாடு லோஹர் நடித்த பல படங்களின் கதியை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக உள்ளது என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

மாரி செல்வராஜின் மஞ்சணத்தி, சிவகார்த்திகேயனின் அடுத்த படம் என கயாடு லோஹர் காட்டில் எந்த கவலையும் இல்லாமல் பட வாய்ப்புகள் குவிந்துக் கொண்டே போகின்றன. ஆனால், கயாடு லோஹர் நடித்து இந்த ஆண்டு வெளியான இதயம் முரளி, ஐ ஆம் கேம், இம்மார்ட்டல், தி பாரடைஸ் என 4 படங்களும் பலத்த அடி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CR
ஆசிரியர்

adminram

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →