Cinema News
18 வருஷமா இத நான் பண்ணதே இல்ல!.. மேடையில் உருக்கமாக பேசிய எஸ்.கே!…
Sivakarthikeyan: விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கெரியவரை துவங்கியவர் சிவகார்த்திகேயன். திருச்சியை சேர்ந்த இவர் கல்லூரி படிப்புக்கு பின் தனது அப்பாவை போலவே போலீஸ் அதிகாரியாக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அவரின் அம்மா அதை அனுமதிக்கவில்லை.
நகைச்சுவை மற்றும் மிமிக்ரி மீது அதிக ஆர்வம் இருந்ததால் இசை கச்சேரிகளில் நடிகர்களை போல பேசி மிமிகிரி செய்து வந்தார். அதன்பின் விஜய் டிவிக்கு சென்று சில நிகழ்ச்சிகளில் ஆங்கராக வேலை பார்த்தார். அப்போதே அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.
இதையும் படிங்க: சத்யராஜை மாத்த முடியாது… அவர் தான் ஹீரோ.. நள்ளிரவில் வாக்குவாதம் செய்த தங்கர்பச்சான்
சினிமாவில் கஷ்டப்பட்டு போராடி வாய்ப்பை பெற்றார். மெரினா என்கிற படத்தில் நடிக்க துவங்கி இப்போது அமரன் வரை 22 திரைப்படங்களில் நடித்துவிட்டார். எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் போன்ற படங்கள் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பெற்று தந்தது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான அமரன் திரைப்படம் உலகமெங்கும் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 150 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த வெற்றியை ஒரு பெரிய விழா எடுத்து கொண்டாட திட்டமிட்டிருக்கிறது படக்குழு.
இந்நிலையில், கோவாவில் நடந்து வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது அந்த மேடையில் பேசிய அவர் ‘தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நான் வேலை செய்தபோதும் சினிமா மீதுதான் எனக்கு ஆசை இருந்தது. டிவி என்றாலும் சரி, சினிமா என்றாலும் சரி காமெடியை எனது கவசமாக பயன்படுத்தினேன்.
எந்த ஒரு வாய்ப்பு வந்தாலும் 100 சதவீதம் எனது உழைப்பை கொடுத்தேன். 2006ம் ஆண்டு முதல் எந்த ஒரு படத்தையும் பைரசியில் நான் பார்த்தது இல்லை. அந்த அளவுக்கு நான் சினிமாவை நேசிக்கிறேன்’ என பேசினார்.