SK: அன்று ஃபோட்டோவுக்கு மாலை.. இன்னைக்கு? SK ஃபேன்ஸ்களிடம் சிக்கிய பிஸ்மி, அந்தணன்

Published on: January 19, 2026
siva (4)
---Advertisement---

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பராசக்தி. படத்திற்கு ஜிவி இசையமைத்திருக்கிறார். படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். படத்திற்கு ஒரு வெயிட்டான தலைப்பைத்தான் வைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே சிவாஜி நடிப்பில் கலைஞர் வசனத்தில் ஒரு எழுச்சிமிக்க படமாக வந்ததுதான் பராசக்தி. சிவாஜி அறிமுகமான படம். அனல்பறிக்கும் கலைஞரின் வசனம் கேட்பவர்களை வீறு கொண்டு எழச்செய்தது. அப்படி பார்த்து வியந்த ஒரு படத்தின் தலைப்பை சிவகார்த்திகேயன் படத்திற்கு வைத்திருக்கிறார்கள் என்றதும் என்னதான் இருக்கிறது என்பதை பார்க்கவே ஆர்வமாக சென்றனர் மக்கள்.

அதற்கு முன்பு இந்தப் படம் ஹிந்தி திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் சில இடங்களில்தான் ஹிந்தி திணிப்பு பற்றி பேசியிருக்கிறார்கள். பெரும்பாலும் காதல், இன்னொரு பக்கம் ஹீரோ வில்லனுக்கு இடையே நடக்கும் மோதல் இவைகள்தான் இடம்பெற்றிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் ஜன நாயகன் படம் வராத கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்களை மேலும் கடுப்பேற்றினார் சுதா கொங்கரா.

குண்டர்கள், ரவுடிகள் என மறைமுகமாக விஜய் ரசிகர்களை தாக்கி பேசியிருந்தார் சுதா கொங்கரா.இதுவும் பராசக்தி படத்திற்கு மேலும் சிக்கலைத் தந்தது. இப்படி ஒரு பிரச்சினை போய்க் கொண்டிருக்க சிவகார்த்திகேயனை அவ்வப்போது சீண்டி வந்தனர் வலைபேச்சு சேனலின் பிஸ்மி மற்றும் அந்தணன். ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் பேசும் போது மாநாடு படத்தில் சிம்பு நடித்தார். ஆனால் பாதியிலேயே அவர் விலகுவதாகவும் அதன் பிறகு நான் நடிக்க வேண்டும் என்றும் தன்னிடம் வந்ததாக சிவகார்த்திகேயன் கூறினார்.

ஆனால் இது சிம்பு சார் தொடங்கிய படம். அதுமட்டுமில்லாமல் அந்தப் படம் ஹிட் ஆகும். அதனால் சிம்பு சாரையே நடிக்க சொல்லுங்கல் என்று சொன்னதாகவும் சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். இதை வலைப்பேச்சு சேனலில் அந்தணன் பேசும் போது அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை, சிவகார்த்திகேயன் சொல்வதை பார்க்கும் போது சிம்பு ஒழுங்காக கால்ஷீட் கொடுக்காததனால்தான் தன்னிடம் வந்ததாக அல்லவா காட்டிக் கொள்கிறார் என்று அந்தணன் பேசியிருந்தார்.

ஆனால் சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ் சும்மா இருப்பார்களா? ஏற்கனவே மாநாடு படம் பற்றி 2019 ல் வலைப்பேச்சில் அந்தணன் பேசிய ஒரு வீடியோவை பதிவிட்டு தமிழ் சினிமாவின் சாபக்கேடு நீங்கள் தான் என சுட்டிக் காட்டியிருக்கின்றனர். 2019 ல் பேசும் போது மாநாடு படம் நடக்கும். ஆனால் சிம்பு நடிப்பாரானு தெரியல. அடிக்கடி காணாமல் போறாராம். அதனால் அந்தப் படத்தை சிவகார்த்திகேயனை வச்சு எடுக்கலாமா என்ற முடிவில் இருக்கிறார்களாம்.

வீடியோவை காண : https://x.com/TamilSecondShow/status/2012797173855846434/video/1