தளபதி 68-ல் சிம்ரனும் இல்லையாம்!.. அந்த நடிகையாம்!.. சிந்துபாத் கதை போல நீளும் பட்டியல்!..

by சிவா |
vijay
X

vijay

வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சமீபத்தில் விஜய், வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றனர். இப்படத்தில் வரும் இரட்டை வேட காட்சிகள் தத்ரூபமாக வருவதற்காக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் ஏற்கனவே வெளியானது.

இதையும் படிங்க: அப்பாகிட்ட மட்டுமில்ல மகனுடன் கூட விஜய் பேசுவது இல்லையா? இயக்குனர் எண்ட்ரி கூட சொல்லவில்லையாம்!

இந்த படத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார். எனவே, இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். இதில், அப்பா விஜய்க்கு ஜோதிகாவும், மகன் விஜய்க்கு பிரியங்கா மோகனும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், இப்படத்திலிருந்து ஜோதிகா விலகிவிட்டார்.

விஜய்க்கு அம்மாவாக என்னால் நடிக்க முடியாது என அவர் கைவிரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, சிம்ரனை நடிக்கவைக்க முயற்சிகள் செய்யப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவரும் இப்போது நடிக்கவில்லையாம். எனவே, சிரிப்பழகி சினேகாவிடம் படக்குழு பேசி வருகிறதாம்.

இதையும் படிங்க: யுவன மட்டும் நம்பினா நடுத்தெருவுல நிக்கணும்… விஜய் எடுத்த முடிவுக்கு காரணம் இதுதானாம்!..

சினேகா கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. விஜயுடன் ஏற்கனவே வசீகரா படத்தில் சினேகா நடித்திருந்தார். அதேபோல், வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் கோவா படத்திலும் நடித்திருந்தார். அவருக்கும், வெங்கட்பிரபுவுக்கும் இடையே நல்ல நட்பும் உண்டு.

எல்லாம் கூடி வந்தால் தளபதி 68 படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாகவும், மகன் விஜய்க்கு அம்மாவாகவும் சினேகாவே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டார்!.. அப்பாவுடன் மகன் சஞ்சய் பேசமாட்டார்!.. பிரபலம் சொன்ன பகீர்!..

Next Story