Cinema News
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சொர்க்கவாசல்!.. முதல் நாள் எவ்வளவு வசூல் தெரியுமா?..
சொர்க்கவாசல் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.
ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து நேற்று வெளியான திரைப்படம் சொர்க்கவாசல். கடந்த 1999 ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் நடப்பதை போல படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியிருக்கின்றார். இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து செல்வராகவன், கருணாஸ், நடராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: மீனாவுக்கு கிடைத்த சூப்பர் ஆர்டர்… கோமதியின் கோபத்தால் மிரண்ட குடும்பம்… கோபி நிலைமை அறிந்த ராதிகா!..
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பாசிடிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றது. இந்த திரைப்படத்தை Swipe Right Studios, Think Studios நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கு கிரிஸ்டோ சேவியர் இசையமைத்து இருக்கின்றார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. மெட்ராஸ் மத்திய சிறையில் கைதியாக இருக்கும் செல்வராகவன் சிறைக்குள் இருந்து கொண்டே மொத்த சென்னையும் ஆட்டி படைக்கின்றார். போதை மருந்து, கட்ட பஞ்சாயத்து என பல குற்றங்களை செய்து வருகின்றார்.
செல்வராகவனின் கதை ஒரு பக்கம் நகர, மற்றொரு பக்கம் ஆர்.ஜே பாலாஜி கையேந்தி பவன் வைத்து நடத்தி வருகிறார். புதிய ஹோட்டல் திறக்க வேண்டும், தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும், அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல கனவுகளுடன் இருந்து வருகின்றார். அந்த சமயத்தில் தான் திடீரென்று போலீசாரால் கைது செய்யப்படுகின்றார்.
கைது செய்யப்பட்ட ஆர்ஜே பாலாஜி செல்வராகவன் இருக்கும் சிறைக்கு கொண்டு செல்லப்படுகின்றார். அங்கு தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருகின்றார். அப்போது செல்வராகவனுக்கும் பாலாஜிக்கும் இடையே மோதல் நடக்கின்றது. இறுதியில் என்ன நடந்தது என்பது தான் இப்படத்தின் கதை. தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தை மிகவும் விறுவிறுப்பாக ஆக்சன் நிறைந்த காட்சிகளால் சிறப்பாக இயக்கி இருக்கின்றார் சித்தார்த்.
எந்த இடத்திலும் ரசிகர்களுக்கு போர் அடித்து விடாமல் படத்தின் கதையை சிறப்பாக கொண்டு சென்று இருக்கின்றார். கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் மிகச் சிறப்பாக இருந்தது. தற்போது வரை ஆர் ஜே பாலாஜியை நகைச்சுவை நடிகராக பார்த்த நமக்கு அவரை முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் பார்ப்பது வித்தியாசமாக இருந்தது.
சிறையில் அவர் படும் கஷ்டங்கள், துன்பங்கள், பயம், கோபம் அனைத்திலும் சிறப்பாக நடித்திருக்கின்றார். சிறைக்கு வெளியில் மட்டுமல்ல சிறைக்குள்ளும் அரசியல் நடக்கின்றது என்பதை மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டி இருக்கின்றார் இயக்குனர் சித்தார்த். இது சிறிய படம் என்பதால் நிச்சயம் பெரிய அளவிற்கு ஓப்பனிங் கிடைக்காது என்பது பட குழுவினருக்கு நன்றாகவே தெரியும்.
இதையும் படிங்க: எல்ஐகே படம் முதலில் நடிக்க வேண்டியது அந்த ஹிட் நடிகரா? லைகாவால் நடந்த மாற்றம்…
ஆனால் ரசிகர்களின் மிகச்சிறந்த வரவேற்பு ஆரம்பத்திலேயே படத்திற்கு கிடைத்திருக்கின்றது. படத்திற்கு தொடர்ந்து பாசிடிவி விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வார இறுதி நாட்களில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் இப்படத்தின் முதல் நாளில் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.