6வது படத்தில் பக்கம் பக்கமா வசனம் பேச பயந்தாரா ரஜினி?

ரஜினி தமிழில் நடித்த ஆறாவது படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’.

Rajinikanth

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் இயக்கத்தில் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இன்ட்ரோவானவர் தான் நம்ம கோலிவுட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்.

இதையடுத்து ‘மூன்று முடிச்சு, அவர்கள், கவிக்குயில்’ போன்ற படங்களில் நடித்த ரஜினிக்கு தமிழில் அமைந்த ஆறாவது படம் தான் ‘புவனா ஒரு கேள்விக்குறி’. இந்த படத்தை இயக்கியது எஸ்.பி.முத்துராமன்.

சமீபத்தில், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கொடுத்த பேட்டியில் நடிகர் ரஜினி குறித்து பேசுகையில் “‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்தோட முதல் நாள் ஷூட்டிங்ல, ரஜினி சார் பேசப்போற வசனத்தை அவர்கிட்ட ஒருத்தர படிச்சு காட்ட சொல்லிட்டு நான் செட்டுக்குள்ள போயிட்டேன்.

வெளியே வந்து பாக்குறேன். ரஜினி சாரை காணோம். எங்க ரஜினின்னு அங்க உள்ளவங்க கிட்ட கேட்டேன். அவர் ஸ்டுடியோ வாசல்ல நடந்து போயிட்டு இருக்குறதா சொன்னாங்க. உடனே அவரை போய் கூட்டிட்டு வாங்கன்னு சொன்னேன்.

ரஜினி சார் வந்தாரு. என்ன முத்துராமன் சார் இப்படி பண்ணிட்டீங்கன்னு சொன்னாரு. ஏன் என்னாச்சுன்னு கேட்டதும், சார் எனக்கு ஒரு முழு படத்துக்குமே டைரக்டர் பாலசந்தர் சார் இவ்ளோ வசனம் கொடுக்க மாட்டாரு. நீங்க ஒரு காட்சிக்கே இவ்ளோ வசனம் கொடுத்துட்டீங்களேன்னு சொன்னாரு.

ரஜினி நீ உன் ஸ்டைல்ல இந்த வசனத்தை பேசு. நாலு வரி சொல்ல முடிஞ்சா சொல்லு, இல்ல எட்டு வரி சொல்ல முடிஞ்சா சொல்லு. அந்தந்த வரிக்கு நான் ஷாட் எடுப்பேன்னு சொன்னேன். அந்த படம் முழுக்கவே, அவர் நாலு வரி, நாலு வரியா தான் வசனம் பேசி நடிச்சாரு” என்று கூறியுள்ளார்.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →