ஒரே நாளில் இவ்ளோ பாடல்களைப் பாடினாரா எஸ்.பி.பி? மனுஷன் தூங்கவே இல்லையா?

தமிழ்த்திரை உலகில் 80ஸ் ஹிட்ஸ்கள் என்றால் அங்கு முக்கியமாக இடம்பெறுவது இளையராஜா பாடல்கள் தான். அதிலும் பாடகர்களாக வலம் வருபவர்கள் எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன், பி.சுசீலா, எஸ்.ஜானகி ஆகியோர் தான்.

இவர்களில் அதிகமான பாடல்களைப் பாடி பட்டையைக் கிளப்பியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். நடிகர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் பாடகர் எஸ்.பி.பி.

இதையும் படிங்க... உங்க கண்டீசனலாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்க.. நயனுக்கு கல்தா கொடுத்த இயக்குனர்

இவர் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பாடலைப் பாடியவர் என்பதில் கின்னஸில் சாதனை படைத்தவர். அதே நேரம் இவரது பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். தமிழ் சினிமா உலகின் பல முன்னணி கதாநாயகர்களுக்கு இவர் தான் பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, சத்யராஜ், பிரபு, மோகன், ராமராஜன், கார்த்திக் என பல ஹீரோக்களுடைய பாடல்கள் ஹிட்டாகக் காரணமே இவரது வசீகரக் குரல் தான்.

இன்றும் இவரது பாடல்களை இரவுப்பொழுதில் கேட்டால் இதமாகத் தான் இருக்கும். பக்திப்பாடல்களிலும் தனி முத்திரையைப் பதித்துள்ளார் எஸ்.பி.பி. என்பது குறிப்பிடத்தக்கது.இவர் ஒரே நாளில் அதிகமான பாடல்களைப் பாடியும் சாதனை படைத்துள்ளார். அது என்ன என்று பார்க்கலாமா...

ஒருமுறை எஸ்.பி.பாலசுப்பிரமணியனும், பி.சுசீலாவும் அமெரிக்காவில் 2 மாதகாலம் கச்சேரிகளில் பங்கு கொள்ள ஒப்புக்கொண்டு இருந்தார்களாம். அதனால் அந்தத் தகவலை இங்குள்ள எல்லா இசை அமைப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாராம்.

அவர் பாட வேண்டிய பாடலை அவர் இல்லாமல் எப்படி பாட முடியும்? அதனால் இசை அமைப்பாளர்கள் அவசரம் அவசரமாக பாடலைப் பதிவு செய்து அதைப் பாடித்தரும்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதையும் படிங்க... கேரள சூப்பர்ஸ்டாரின் வாய்ப்பைத் தட்டித் தூக்கிய உலகநாயகன்… அட அது சூப்பர்ஹிட் படமாச்சே..!

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்னால் ஒரே நாளில் 19 பாடல்களைப் பாடினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஒரே நாளில் அதிகபட்சமான பாடல்களைப் பாடினார் என்றால் அது இதுதான். அவற்றில் 12 பாடல்களை அவரோடு இணைந்து பாடியவர் பி.சுசீலா.

மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it