ஸ்ரீவித்யா ஒன்னும் யாரும் இல்லாம சாகல!.. உண்மை தெரியாம பேசாதீங்க!.. பொங்கும் உறவினர்…

Srividya: நடிகை ஸ்ரீவித்யா கடைசி காலத்தில் கஷ்டப்பட்டு தனியாக இறந்ததாகவே தகவல் இருக்கும் நிலையில், அவரின் சொந்த அண்ணன் மனைவி எதுவும் தெரியாமல் மீடியா நிறைய பேசி விட்டதாக தழுதழுக்கும் குரலில் அவர் கூறி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
ஸ்ரீவித்யா விவகாரத்துக்கு பின்னர் தனியாக கேரளாவில் இருந்தார். அப்போது அவருக்கும் மினிஸ்டர் லெவலில் இருந்த கணேஷ்குமார் என்பவருக்கும் உறவு இருந்தது. அதை எங்களிடம் கூட அவர் சொல்லவில்லை. என் மாமியார் சாவுக்கு கூட வந்த உடனே கிளம்பிவிட்டார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் நடிப்பில் அதிக நாட்கள் ஓடிய டாப் 15 படங்கள்!.. ரஜினி படத்தை தாண்டிய சின்னக் கவுண்டர்..
அவனும் நேராக கேட்காமல் மறைமுகமாக கேட்க அப்போதும் சொல்லவில்லை. என் மகனும் எதுவும் இல்ல அத்தைக்கு. கொஞ்சம் ஸ்லோவா நடக்குறா என்றான். ஆனால் அந்த நேரத்தில் தான் முதுகு தண்டில் கேன்சர் பரவி இருக்கிறது. நாங்களும் சரி எதுவும் இல்லை என நினைத்து கொண்டோம். அப்போது தான் பத்திரிக்கையில் ஸ்ரீவித்யா கடைசி காலத்தில் இருப்பதாக தகவல் வந்தது.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் அஞ்சா!… தாங்குவாரா உலக நாயகன்… ஜெட் வேகத்தில் வேலை செய்வதுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?
பின்னர் இன்னும் ஸ்ரீவித்யாவுக்கு சில மணித்துளிகள் தான் என்ற தகவல் வந்ததும் நானும் என் கணவர் பையன் ஓடிப்போய் அவளுடனே இருந்தோம். முழுப்பிதுங்கி அவளை பார்ப்பதற்கே அத்தனை கஷ்டமாக இருந்தது. கடைசி காரியம் செய்யக்கூட ஆள் இல்லை. என் கணவர் தான் செய்தார். அங்கு பெரிய இடத்தில் அவள் உடலை வைத்து பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி பிராமண முறைப்படி அடக்கம் செய்தோம்.
என் கணவர் தான் கொள்ளியே போட்டார். எங்களை அவள் ரூமில் ஒருநாள் கூட அந்த மினிஸ்டர் தங்கவிடவில்லை. நாங்கள் சென்னை திரும்பி எங்க முறைப்படி அவளுக்கு செய்ய வேண்டியதை இன்று வரை செய்து கொண்டு தான் இருக்கிறோம். நானும் அவள் இறந்த நாளில் அன்னத்தானம் செய்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு தான் என்றும் வித்யாவின் அண்ணி தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது! தரமாக தயாராகி வரும் கலக்கல் காமெடி படத்தின் இரண்டாம் பாகம்