More
Categories: Cinema News latest news

விஜய் வீட்டு முன்னாடி திரிஷா பண்ணது டேர்!.. விடாமல் அசிங்கப்படுத்தும் சுசித்ரா!.. ஆக்‌ஷன் எடுப்பாரா?

பாடகி சுசித்ராவால் கோலிவுட் தற்போது கதிகலங்கி கிடக்கின்றது. சினிமா பிரபலங்கள் எல்லாம் போதைக்கு அடிமையாகி பலான வேலை பார்த்து வருவதாக சுசித்ரா தொடர்ந்து அவதூறு கருத்துக்களை அடுக்கி வரும் நிலையில் அவருக்கு எதிராக யாரும் குரல் எழுப்பாமல் அமைதியாக உள்ளது அதைவிட அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக நடிகை திரிஷாவை தொடர்ந்து இந்த விவகாரத்தில் அசிங்கப்படுத்தி வருகிறார் சுசித்ரா. மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான திரிஷா கடந்த 23 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க:கிஸ் அடிச்சதிலேயே பிடிச்ச நடிகை! கார்த்திக் இப்படி பொசுக்குனு சொல்லிட்டாரே

சமீபத்தில், விஜய் அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் திரிஷா ஜோடி போட்டு மீண்டும் நம்பர் ஒன் நடிகையாக வளம் வரும் நிலையில், அவரை அட்டாக் செய்யும் விதமாக சுசித்ராவை யாராவது பின்னாடி இருந்து இயக்குகிறார்களா என்கிற கேள்விகளையும் திரிஷா ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜய், தனுஷ், சிம்பு, ஆண்ட்ரியா, சங்கீதா, கிரிஷ் மற்றும் திரிஷா உள்ளிட்ட பலரது பெயர்களை வெளிப்படையாக சொல்லி அவர்களது பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக தொடர்ந்து ஒவ்வொரு யூடியூப் சேனல்களுக்காக திடீரென சுசித்ரா பேசிய வருவது பலரையும் ஷாக்கில் ஆழத்தில் உள்ளது.

இதையும் படிங்க: விஜய் இடத்துக்குப் போட்டி போடும் பிரபலம் யார்? தளபதி 69 பட அப்டேட் இதுதான்..!

நடிகர் விஜய் வீட்டின் திரிஷா நடனமாடியது ஒரு டேர் என்றும் பார்ட்டிகளில் திரிஷா தான் லெஜெண்ட் போல இருப்பார். என்ன சொன்னாலும் அவர் செய்து முடித்து விடுவார் என திரிஷா குறித்து தொடர்ந்து படுமோசமான கருத்துக்களை சுசித்ரா வெளியிட்டு வருவது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

மன்சூர் அலிகான் திரிஷாவுடன் பலாத்கார காட்சி படத்தில் வைக்கவில்லை என பேசியதற்கும் கூவத்தூர் ரெசார்ட்டில் திரிஷா வந்தார் என அரசியல்வாதி பேசியதற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்து வழக்குப் போட்டு நடிகை திரிஷா இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: அந்த குரல் என் குரல் அல்ல!.. பயில்வான் ரங்கநாதனால் பதறிப்போன சுசித்ராவின் எக்ஸ் கணவர்!..

Published by
Saranya M

Recent Posts