Connect with us
jana

Cinema News

திருப்பதி வெங்கடாசலபதிகிட்டயே பணம் இல்லையா? திடீரென நிறுத்தப்பட்ட ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு

தற்போது விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், பாபி தியோல், கௌதமேனன், பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி என பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தை பொருத்தவரைக்கும் இது விஜய்க்கு கடைசி படம் .

அதன் பிறகு அரசியலில் தீவிரமாக களம் இறங்குகிறார் விஜய். அதனால் இந்த படத்தில் அரசியல் சம்பந்தமான சில விஷயங்கள் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதுவும் எச் வினோத் என்றாலே ஒரு தரமான அரசியலை பேசும் படத்தை எடுப்பதில் சிறந்த இயக்குனர். இதில் விஜயின் படம் என்பதாலும் அவருடைய இது கடைசி படம் என்பதாலும் கண்டிப்பாக அரசியல் சம்பந்தப்பட்ட சில விஷயங்கள் இந்த படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை பற்றிய சமீபத்திய தகவல் என்னவெனில் விஜயின் முந்தைய இயக்குனர்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவிக் கொண்டு வருகிறது. லோகேஷ், நெல்சன் என முக்கிய கேரக்டர்களில் இவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது.

ஏனெனில் இந்த படத்தில் பணிபுரிந்த டெக்னீசியன்களுக்கு 22 நாட்களுக்கு உரிய பேட்டா கொடுக்கவில்லை என்பதால் அவர்கள் ஃபெப்சியில் புகார் செய்திருந்திருக்கின்றனர். அதனால் இது குறித்து அவர்கள் ஆக்சன் எடுக்க ஜனநாயகன் திரைப்படத்தை தற்போது நிறுத்தி வைத்திருப்பதாக தெரிகிறது. இந்த செய்தியை கேட்டதும் ரசிகர்களுக்கு ஒரே அதிர்ச்சி.

ஏனெனில் பெங்களூரில் ஒரு தலை சிறந்த தயாரிப்பு நிறுவனம் கே வி என். அவர்களிடம் காசு இல்லை என்பது அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியான தகவலாக தெரிகிறது. ஆனால் இதற்குப் பின்னணியில் என்ன நடந்தது என்பது பற்றியும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. கே வி என் நிறுவனம் பிரஸ்டீஜ் நிறுவன த்திடம் ஒரு அசோசியேடிவ்வாக இணைந்து பணிபுரிந்து வந்தார்களாம்.

nayagan

nayaganதிடீரென அந்த நிறுவனத்தில் இருந்து கே வி என் நிறுவனம் விலகி விட்டதாக தெரிகிறது. சமீபத்தில் கே வி என் நிறுவனத்தில் ஐடி ரெய்டும் நடந்திருக்கிறது. அதில் இவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்குகளை முடக்கி இருப்பதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது. அதனால் தான் படப்பிடிப்பில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பேட்டா சரிவர கொடுக்க முடியாமல் போனதாம். அதுமட்டுமல்ல இன்னும் அந்த படத்தில் 40 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top