போனஸ் மேல போனஸ அள்ளி வீசும் சன்பிக்சர்ஸ்…எல்லாம் ஜெயிலர் செஞ்ச வேலைதான்…

Jailer movie: சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த மாதம் வெளியான படம்தான் ஜெயிலர். இத்திரைப்படத்தில் ரஜினி, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு போன்ற பல முன்னணி கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த்டிரைப்படம் மிக பெரிய அளவில் வசூலில் சாதனை படைத்துள்ளது.
இன்னமும் பல திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு கொண்டுதான் இருக்கிறது. கிட்டதட்ட 700 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இத்திரப்படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். சிவராஜ்குமார், மோஹன்லால் போன்ற பிற மொழி நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க:லேடி சூப்பர்ஸ்டாருலாம் ஓரமா போ… இனி என் ஆட்டம் தான்… மிரட்டும் த்ரிஷாவின் புதிய அவதாரம்!
அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலின் துள்ளல் நிறைந்த ஆட்டத்தினால் இப்பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது. மேலும் குட்டி செவுத்த எட்டிபார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு என்ற பாடல் வரிகள் அனிருத்தின் இசையுடன் சேர்ந்து பெரும் வெற்றியை சம்பாதித்தது.
இத்திரைப்பட வெற்றியை முன்னிட்டு இத்திரைப்படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்களுக்கு சன்பிக்சர்ஸ் தலைவரான கலாநிதிமாறன் கார் போன்ற பரிசிகளை வழங்கினார் என்பது நம் அனைவருக்கு தெரிந்ததே. காருடன் சேர்த்து அவர்களின் சம்பளமும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:மூச்சு விடாமல் இருக்கும் தமிழ்நாடு… விஜய் மீது பாசத்தை பொழியும் வெளிநாடுகள்.. என்ன நடக்குகிறது?
தற்போது இவர்களுக்கு இதற்கும் மேல் போனஸாக சில தொகையை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இத்திரைப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத்க்கு 2கோடி ரூபாயும் அதைபோல் இயக்குனர் நெல்சனுக்கு 5கோடி ரூபாய் போனஸாகவும் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கே இவ்வளவு போனஸ் என்றால் படத்தில் கதாநாயகனான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ரூ.30 கோடி போனஸாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 30 கோடிக்கு பின் ஒரு கதையும் உள்ளது. 2021ஆம் ஆண்டு இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான படம்தான் அண்ணாத்த. இத்திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ்தான் தயாரித்தது.
இதையும் படிங்க:KH234-வில் மேலும் 2 நடிகர்கள்!.. லியோவுக்கே டஃப் கொடுக்கும் மணிரத்னம்… பெரிய சம்பவமே இருக்கு!..
இப்படம் தோல்வியை சந்தித்தது. அப்படத்திற்கு ரஜினிக்கு சம்பளமாக 100 கோடி பேசப்பட்டது. ஆனால் பட தோல்வியினால் வெறும் 80 கோடியே கொடுத்துள்ளனர். ஆனால் இப்போது ஜெயிலர் படம் மகத்தான வெற்றியை கண்டுள்ளதால் அதன் மீதி ரூபாயான 20கோடியுடன் சேர்த்து போனஸ் தொகை 10 கோடி என 30 கோடியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.