Connect with us

Cinema History

இந்தியில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகள் எங்கே போனார்கள்? ஒரு அலசல்

தமிழுக்கு பல்வேறு மொழிகளில் இருந்தும் பகுதிகளில் இருந்தும் படையெடுக்கின்றனர் நடிகைகள். புதுப்புது அழகிகளைத் தான் ரசிகர்கள் ரசிக்கின்றனர் என்பதே தயாரிப்பாளர்களின் எண்ணம்.

இதனால் தான் தமிழில் பேசும் நடிகைகளை விட பிற மாநில நடிகைகள் தமிழுக்கு அறிமுகமாகி வருகின்றனர். அந்த வகையில் இந்தித்திரையுலகில் இருந்து தமிழுக்கு பல நடிகைகள் வந்துள்ளனர். இவர்களில் ஒருசிலரைப் பற்றிப் பார்க்கலாம்.

கங்கனா ரனாவத்

Thalaivi kangana ranawat, Aravind samy

இந்தி, தமிழ் என இரு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். மாடலிங் ஆகவும் புகழ்பெற்றவர் இவர். 2006ல் வெளியான கேங்ஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களின் உள்ளத்தில் இடம்பிடித்தார்.

இந்தி திரையுலகில் இவர் படங்கள் ஏராளமாக ஹிட் அடித்துள்ளன. தமிழில் இவர் நடித்த ஒரே படம் தாம் தூம். ஜெயம் ரவியின் ஜோடி. தலைவி படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றார். இந்த படத்தில் அவர் அரவிந்த்சாமியுடன் இணைந்து நடித்துள்ளார்.

இதில் கங்கனாவின் நடிப்பு சூப்பராக இருந்தபோதிலும்; படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது தக்காட் என்ற இந்திப்படத்தில் நடித்து வருகிறார். நடனத்தில் இவர் சூறாவளி போல சுழன்று சுழன்று ஆடுவதில் வல்லவர்.

ஊர்மிளா மடோன்கர்

Rangeela Oormila

மும்பையில் பிறந்த இவர் தமிழ், இந்தி திரையுலகில் பல படங்களில் நடித்துப் பெரும் புகழ் பெற்றுள்ளார். 1995ல் வெளியான ரங்கீலா படத்தில் இவரது நடிப்பு அபாரம். இவரது நடனம் செமயாக இருக்கும். ரங்கீலா படம் தமிழிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1995ல் ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் அமீர்கான், ஜாக்கிஷெராப் உடன் இணைந்து நடித்தார் ஊர்மிளா.

இந்தப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களைக் கிறங்கடித்திருப்பார். தொடர்ந்து இவர் தமிழில் கமல் உடன் இந்தியன் படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பினார். ஆனால் அதற்கு முன்பே இவர் அந்தம், காயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஸ்மைல் ப்ளீஸ் என்ற படத்தில் கடைசியாக நடித்துள்ளார். இந்தியன் படத்தில் கமலை மனீஷாகொய்ராலாவுடன் போட்டி போட்டு காதலிப்பார் ஊர்மிளா மடோன்கர்.

மனீஷா கொய்ராலா

நேபாள நாட்டின் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர். மணிரத்னத்தின் பம்பாய் படம் தான் இவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. தமிழில் ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்த படம் இது. அரவிந்த்சாமியின் ஜோடியாக நடித்து இருந்தார். அதன்பின் பெரிதும் கவர்ந்த படம் இந்தியன். கமலின் ஜோடி. 1998ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் ஷாருக்கான், மனீஷா கொய்ராலா, ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் நடித்து அசத்தினர்.

1942 எ லவ் ஸ்டோரி என்ற காதல் படத்தில் நடித்து இந்தியில் பெரும்புகழ் பெற்றார். தமிழில் ஷங்கரின் இயக்கத்தில் முதல்வன் படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். காமோஷி, கம்பெனி, ஆகிய இந்திப்படங்களில் நடித்த இவர் 2011ல் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் வில்லியாக நடித்து இருந்தார். 2021ல் இந்தியா ஸ்வீட்ஸ் அண்டு ஸ்பைசிஸ், சர்தார் உத்தம் ஆகிய இந்திப் படங்களில் கடைசியாக நடித்துள்ளார்.

ஐஸ்வர்யாராய்

Ishwaryarai in PS-1

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் இருவர் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தேர்ந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார். தமிழில் ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த்தின் ஜோடியாக அறிமுகமானார். ராவணன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். இந்தி திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார்.

கர்நாடகாவைச் சேர்ந்தவர். 1999ல் சல்மான்கானுடன் டேட்டிங்கில் இருந்து 2001ல் பிரிந்தார். 2007ல் அபிஷேக் பச்சனை மணமுடித்தார். எந்திரன் படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்து அசத்தினார். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் 1ல் நடித்து வருகிறார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை வண்ணத்தில் உருவாகிறது.

சுஷ்மிதாசென்

Ratchagan Nagarjuna, sushmita sen

ஐதராபாத் கட்டழகியான இவர் 1994ல் மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழில் ரட்சகன் படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றார். இவர் நடிகைகளில் சற்றே உயரமானவர். இந்தியில் இவர் தஸ்தக் என்ற படத்தில் அறிமுகமானார். தமிழில் ரட்சகன் படத்தோடு சரி.

அதன்பின் இவருக்கு எந்தப்படமும் வரவில்லை. கேரிந்தாவுடன் நடித்த டு நாட் டிஸ்டர்ப் என்ற இந்தி படமும் தோல்வியைத் தழுவியது. முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிச் சென்றார். கடைசியாக இந்தியில் இவர் ஆர்யா ஆர்யா சரீம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top