முதல்ல முருகரு!.. அடுத்து கிருஷ்ணரா?.. சூர்யா பண்ண போகும் சித்து விளையாட்டு. சிவகுமார் பாவம்ப்பா!..

Suriya Sivakumar - பாலிவுட்டில் அக்ஷய் குமாரை வைத்து சூரரைப் போற்று படத்தை தயாரித்து கேமியோ ரோலில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க உள்ள சூர்யா பாலிவுட்டில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள புதிய படத்திலும் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சியான் விக்ரம் நடிப்பில் கர்ணன் திரைப்படம் ஒன்று உருவாக உள்ள நிலையில், ஹிந்தியில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கர்ணன் திரைப்படத்தை விஜய் வர்மாவை ஹீரோவாக வைத்து உருவாக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: என் மனைவி சங்கீதா மாதிரியே பேசுறீங்க!.. லியோ பட நடிகையை பார்த்து விஜய் இப்படி சொல்லியிருக்காரே!

நடிகை தமன்னாவின் காதலர் விஜய் வர்மா கர்ணனாக ஹிந்தி படத்தில் நடிக்க உள்ள நிலையில் படத்தில் நடிகர் சூர்யா கிருஷ்ணர் வேடத்தில் நடிக்கப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தி நடிகர் அவினாஷ் திவாரி அர்ஜுனனாக நடிக்க போகிறாராம்.

ஏற்கனவே எதற்கும் துணிந்தவன் படத்தில் முருகர் இடத்தில் பாடல் காட்சி ஒன்றுக்கு நடிகர் சூர்யா நடித்தது பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. இந்நிலையில், அடுத்து கிருஷ்ணர் படத்தில் நடிக்கப் போகிறாரா என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: சிவாஜியை பார்க்கும் ஆர்வத்தில் விழுந்தடிச்சு ஓடிய வடிவேலு! நடந்த சம்பவமே வேற – நடிகர் திலகம்னா சும்மாவா?

திரையுலகின் மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமார் கிருஷ்ணராகவும், முருகன் ஆகவும் பல படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில், அவரது மகள் சூர்யாவும் அடுத்தடுத்து முருகன் ஆகவும் கிருஷ்ணராகவும் நடிக்க முயற்சித்து வருவதை பார்த்து சிவக்குமார் ரசிகர்களே கடுப்பாகி உள்ளனர் என கலாய்த்து வருகின்றனர்.

அதேசமயம் நடிகர் சூர்யாவின் அந்த சிரிப்பு மாய கிருஷ்ணன் கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தும் என்றும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் சிறப்பாக எடுத்தால் சூர்யா தாராளமாக கிருஷ்ணர் வேடத்தில் நடிக்கலாம் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தலைவர் 170, 171னு நடிக்க முடியுது.. அரசியலுக்கு மட்டும் வர முடியாதா?.. வாயடைத்துப் போன ரஜினி ரசிகர்!..

கங்குவா படத்தை தொடர்ந்து அடுத்த பிரம்மாண்ட படமாக மகாபாரதத்தில் கிளை கதையான கர்ணன் படம் உருவானால் சூர்யாவின் மார்க்கெட் பாலிவுட்டிலும் பெரிய உச்சத்தை அடையும் என கூறுகின்றனர்.

 

Related Articles

Next Story