Surya: சூர்யா தன்னுடைய அடுத்த படம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது இது குறித்த சுவாரசிய அப்டேட்களும் இணையத்தில் கசிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் சூர்யா. தொடர்ச்சியாக அவருடைய படங்கள் ஹிட் கொடுத்து வந்த நிலையில் தன்னுடைய குடும்பத்துடன் மும்பை பக்கம் குடி பெயர்ந்தார். அதை வேளையில் தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வந்தார்.
இதையும் படிங்க: நா செகண்ட் ஹேண்ட்டா?!.. டைவர்ஸ் ரொம்பவே வலிச்சது!.. திடீரென வைரலாகும் சமந்தா!..
980 நாட்கள் கழித்து சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் பல மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது. மற்ற மொழி வரலாற்று திரைப்படங்கள் போல இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறும் என தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால் படம் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருக்கிறது.
தற்போது நடிகர் சூர்யா தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது. மீண்டும் தமிழ் சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன்னுடைய 44வது திரைப்படத்தை நடத்தி முடித்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து நடிகரும் மற்றும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தன்னுடைய 45 வது படத்தை துவங்க இருக்கிறார்.
இதையும் படிங்க: நயன்தாராலாம் சும்மா!. நாக சைதன்யா – சோபிதா திருமண ஒளிபரப்புக்கு எவ்வளவு கோடி தெரியுமா?!…
இப்படத்தின் இயக்குனராக பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான பைரதி ரனகல் படத்தினை இயக்கிய இயக்குனர் நர்தனுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறதாம். தொடர்ந்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கேவிஎன் நிறுவனம் தளபதி69 படத்தினை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
