Vijay SK: அஜித், ரஜினி கைவிட்ட நிலையில் கைகொடுத்த விஜய்! இத மறந்து போனாரா சிவகார்த்திகேயன்

Published on: December 20, 2025
siva
---Advertisement---

ஜனவரி 14 ஆம் தேதி பராசக்தி படம் ரிலீஸாக ஜனநாயகன் படத்தோடு நேரடியாக மோத இருக்கின்றது. ஜனவரி 9 ஆம் தேதி ஜன நாயகன் படம் ரிலீஸாகும் நிலையில் அடுத்த நாளான 10 ஆம் தேதியே பராசக்தி படம் ரிலீஸாக இருக்கின்றது. இதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் அவருடைய கருத்துக்களை கூறியிருக்கிறார். இதை பற்றி திருப்பூர் சுப்பிரமணியன் பேசும் போது நன்றியை மறந்தாரா சிவகார்த்திகேயன் என அனைவரும் கூறுகிறார்கள். இதில் என்ன நன்றியை மறந்தார்? ஒரே நாளில் இரு நடிகர்களின் படங்கள் வரக்கூடாதா என சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

ஆனால் அந்தணன் கூறும் போது, இரு நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதில் எந்த தவறும் இல்லை. வரக்கூடாது என்று நானும் சொல்லவில்லை. ஆனால் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் நினைத்தார். ஆனால் அதுக்கு ரஜினி மறுத்துவிட்டார். அதை போல் குட் பேட் அக்லி படத்தில் அல்லது விடாமுயற்சி படத்திலாவது ஒரு கேரக்டரில் நடிக்கலாம் என சிவகார்த்திகேயன் நினைத்தார். ஆனால் அதற்கு அஜித் தரப்பில் இருந்து எந்தவொரு ரெஸ்பான்ஸும் இல்லை.

இதற்கிடையில் கோட் படத்தில் துப்பாக்கி சீனில் நடிக்க வைத்ததன் மூலம் விஜய் ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்றார் சிவகார்த்திகேயன். அந்த நன்றிக்காகவது சிவகார்த்திகேயன் ஜன நாயகன் படத்தோடு மோத வேண்டாம் என சொல்லியிருக்கலாம். ஆனால் இதைத்தான் சிவகார்த்திகேயனும் விரும்புகிறார். இது ஒரு கட்டத்தில் விஜய்க்கு தெரியவர, என்ன சொல்றீங்க ரேஞ்சுக்கு ஷாக்கானார் என்பது தகவல்.

இன்னொரு பக்கம் ஜன நாயகன் படத்தை ஒரு வினியோகஸ்தர் மட்டும் வாங்கினால் பிரச்சினையே இல்லை. ஆனால் பல வினியோகஸ்தரர்களிடம் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் இப்போது பிரச்சினை. ஏனெனில் பராசக்தி படமும் ஜன நாயகன் திரைப்படமும் ஒன்றாக ரிலீஸாகும் பட்சத்தில் கலெக்‌ஷனும் பாதி பாதி என்றளவில்தான் இருக்கும்.

ஆனால் ஜன நாயகன் படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கியவர்களுக்கு அந்தப் படத்தின் கலெக்‌ஷன் என்பது நினைத்த மாதிரி அமையாது. அதனால் முதலில் பேசப்பட்ட தொகையை கொடுக்க மாட்டோம் என்று கூறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதைத்தான் இங்குள்ளவர்கள் விரும்புகிறார்கள். விஜய்க்கும் வினியோகஸ்தரர்களுக்கும் பிரச்சினையை உண்டு பண்ண வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

ஆனால் இதெல்லாம் நடக்கும் என விஜய்க்கு முன்பே தெரிந்திருக்கும். தெரிந்துதான் அரசியலுக்கே வந்திருக்கிறார். மேலும் விஜய்க்கு எதிராக திரையுலகை திருப்பவும் ஒரு சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதுவும் விஜய்க்கு தெரியும். இருந்தாலும் இளைஞர்களின் இதயக்கனியாக விஜய் இருந்துவருகிறார். திரையுலகை பொருத்தவரைக்கும் நம்பக்கூடாத ஒரு உலகம் என ஜெயலலிதா அப்பவே கூறினார்.

ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என திரையுலகம் கேட்ட போது , உங்களை பற்றி எனக்கு தெரியும். நம்ப முடியாத உலகம் திரையுலகம் என திரையுலகை கொஞ்சம் தள்ளி வைத்துதான் பார்த்தார் ஜெயலலிதா. அதனால் எல்லாவற்றிற்கும் தயாராகத்தான் இறங்கியிருக்கிறார் விஜய் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.