இத்தனை அவார்டுகளை வாங்கி என்ன பயன்? பாரதிராஜாவுக்குள் இருக்கும் ஆறாத வலி என்ன தெரியுமா?

Director Bharathiraja: தமிழ் சினிமாவின் போக்கை ஒரு காலகட்டத்தில் தன்னுடைய படைப்பால் மாற்றியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா கிராமத்து மண்வாசனையுடன் கூடிய கதைகளை இயக்கி மாபெரும் வெற்றி படங்களை இந்த தமிழ் சினிமாவிற்காக கொடுத்திருக்கிறார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இன்றுவரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார் பாரதிராஜா. சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் கூட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பாரதிராஜா. அவருடைய அடையாளமே ஒவ்வொரு மேடைகளின் போது அவர் ஆரம்பிக்கும் பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா என்ற அந்த வார்த்தை தான்.

இதையும் படிங்க: கடனை அடைக்க முடியாமல் விபரீத முடிவை எடுத்தாரா விஷால்? தயாரிப்பாளர் சொன்ன ஷாக் தகவல்

கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படத்தில் தான் முதன் முதலில் முழு நீள நடிகராக மாறினார். அதன் பிறகு பாண்டியநாடு, ஆயுத எழுத்து, எங்க வீட்டுப் பிள்ளை, குரங்கு பொம்மை ,திருச்சிற்றம்பலம் என பல படங்களில் நடித்து இப்ப உள்ள தலைமுறைகளை ரசிகர்களாக பெற்றிருக்கிறார் பாரதிராஜா. அவருடைய சாதனைகளை லிஸ்ட் போட்டு நம்மால் சொல்ல முடியாது.

எத்தனையோ அவார்டுகள் விருதுகள் பேர்கள் என எண்ணற்ற பெருமைகளுக்கு சொந்தக்காரராக விளங்கியிருக்கிறார் பாரதிராஜா. இந்த நிலையில் அவருக்குள் இருக்கும் ஒரு தீராத வலி என்ன என்பதை பற்றி சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். பாரதிராஜாவுக்கு பிடித்த ஒரு பாடகர் என்றால் அது டி எம் சௌந்தரராஜன்தானாம்.

இதையும் படிங்க: எந்த கெட்ட பழக்கமும் இல்ல!.. பொண்ணுங்களையாவது ரசிப்பீங்களா?!.. எம்.ஜி.ஆரை வம்பிழுத்த இயக்குனர்!..

அவருடைய கணீர் குரல் தன்னை மிகவும் ஈர்த்தது என்றும் அது வெறும் மனித குரல் அல்ல தமிழின் குரல். அந்தக் குரலை ஒரு பாடலிலாவது என்னுடைய படத்தில் வைக்க முடியாமல் போனது தான் எனக்குள் இருக்கும் ஒரு தீராத வலி என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறாராம். அதைப்போல தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களாக இருந்த பத்மினி, மனோரமா, நாகேஷ் இவர்களின் திறமையையும் தன்னுடைய படங்களில் பயன்படுத்தாமல் போனதும் என்னுடைய ஒரு பெரிய வருத்தம் என கூறி இருக்கிறாராம் பாரதிராஜா.

 

Related Articles

Next Story