ரஜினிக்காக விஜய் அப்படி பேசலயாம்… பின்னாடி இருக்கும் சூட்சமம் என்னனு தெரியுமா?…

Published on: November 3, 2023
leo audio launch
---Advertisement---

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் லியோ. இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே பலவித சர்ச்சைகளை சந்தித்தது. இந்த படத்தின் இசை வெளீயீட்டு விழாவினை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் கட்டுபடுத்த முடியாத அளவிற்கு விஜய் ரசிகர்கள் வந்தால் அது அசாதாரண சூழ்நிலை உண்டாக்கலாம் என எண்ணி இந்த நிகழ்ச்சியை நடத்தவில்லை. ஆனால் இதற்கு பலவித காரணங்களும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த இசை வெளியீட்டு விழா விஜய் ரசிகர்களால் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த நிகழ்ச்சியும் கூட.

இதையும் வாசிங்க:முதல்ல முருகரு!.. அடுத்து கிருஷ்ணரா?.. சூர்யா பண்ண போகும் சித்து விளையாட்டு. சிவகுமார் பாவம்ப்பா!..

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய காக்கா கழுகு கதைக்கு விஜய் முற்றுப்புள்ளி வைப்பார் என பல ரசிகர்களும் நெட்டிசன்களும் காத்திருந்தனர். ஆனால் இந்நிகழ்ச்சி நடைபெறாமல் போனதில் அனைவரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.

மேலும் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு விஜய் ஆசைப்படுவதாக பலவித செய்திகளும் பரவின. அவற்றுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் இவை அனைத்துக்கும் சமீபத்தில் நடந்த லியோ வெற்றி விழா தீர்வாக அமைந்தது.

இதையும் வாசிங்க:அண்ணாவ் பிக் ஃபேன் அண்ணாவ்! ஏர்போர்ட்டில் ரசிகர் சொன்னதுக்கு விஜயின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

இந்நிகழ்ச்சியில் விஜய் கேப்ட்ன் என்றால் அது ஒருவர்தான், நடிகர் திலகம் என்றால் அது ஒருவர்தான், அதைபோல சூப்பர் ஸ்டார் என்றாலும் அது ஒருவர்தான் என அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் விஜயின் இந்த பேச்சு திரும்பவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2026 என்றால் என்ன? என தொகுப்பாளர் கேள்வி கேட்டதற்கு ‘கப்பு முக்கியம் பிகிலு’ என பதிலளித்த விஜய் அரசியலுக்கு தான் வரப்போவதை சூட்சகமாக தெரிவித்தார்.

அதனால் 2026ல் அரசியலுக்கு வருவதற்காக மட்டுமே இப்படியான பேச்சை பேசியுள்ளார் எனவும் மற்றபடி ரஜினிக்காக இதை பேசவில்லை எனவும் வலைபேச்சு பிஸ்மி நேர்கானல் ஒன்றில் தெரிவித்துள்ளார். விஜய் இவ்வாறு பேசினால்தான் ரஜியின் ரசிகர்கள் சமாதானம் ஆவார்கள் எனும் நோக்கத்திலும், மேலும் ரஜினியின் ரசிகர்களும் விஜயின் தேர்தல் வெற்றிக்கு முக்கியம் எனும் எண்ணத்திலும்தான் இவ்வாறு பேசியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க:என் மனைவி சங்கீதா மாதிரியே பேசுறீங்க!.. லியோ பட நடிகையை பார்த்து விஜய் இப்படி சொல்லியிருக்காரே!

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.