தக் லைஃபில் இருந்து வெளியேறிய துல்கர் சல்மான்… உள்ளே வரும் சூப்பர்ஸ்டார்… இந்த படமாவது ரிலீஸாகுமா?

by Akhilan |   ( Updated:2024-03-16 23:43:58  )
தக் லைஃபில் இருந்து வெளியேறிய துல்கர் சல்மான்… உள்ளே வரும் சூப்பர்ஸ்டார்… இந்த படமாவது ரிலீஸாகுமா?
X

Thug Life: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான் விலகி இருக்கும் நிலையில் அவர் கேரக்டருக்கு முக்கிய நடிகரை ஒப்பந்தம் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தினை உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம், கமல் ஹாசனின் 'ராஜ் கமல் பிலிம்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.

இதையும் படிங்க: கொடுத்து வச்ச சூர்யா!.. கவர்ச்சி கடலாக கலக்கும் கங்குவா ஹீரோயின்!.. ஜோதிகா தான் ரொம்ப பாவம்!..

இப்படத்தில் கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா ஆகியோர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சமீபத்தில் துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகினார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தொடர்ச்சியாக பிஸியாக இருக்கும் துல்கர் கால்ஷூட் பிரச்னையால் இப்படத்தில் இருந்து விலகினார். ஆனால் புறநானூறு படத்தில் துல்கர் இன்னமும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துல்கர் வேடத்துக்கு நிறைய முன்னணி நாயகர்கள் பேச்சுவார்த்தையில் இருந்தனர்.

இதையும் படிங்க: கோட் ஷூட்டிங் லொகேஷன் மாறியதால் பிரபுதேவாவுக்கு அடித்த ஜாக்பாட்!.. அனுஷ்காவுடன் டூயட் பாடப்போறாரா?

முன்னதாக நானியை நடிக்க வைக்க பேசினர். ஏற்கனவே நான் ஈ படத்தில் நானி நடித்து இருந்தார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் துல்கர் கேரக்டருக்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் சிலம்பரசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறதாம். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறதாம்.

சிம்பு படப்பிடிப்பில் இணைந்த பின் தொடங்கும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிம்பு கலெக்டராக நடிப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே ராஜ்கமல் பிலிம்ஸ் சிம்பு நடிக்க இருக்கும் திரைப்படம் தாமதமாகி வருவதால் அந்த கால்ஷீட்டை இந்த படத்துக்கு பயன்படுத்தும் ஐடியாவில் இதை செய்திருப்பதாகவும் தெரிவிக்கினறனர்.

இதையும் படிங்க: கோச்சிக்கிட்டு போன பூமிகா… தேடி அலைந்த படக்குழு… கடைசியில் ஹீரோவை வைச்சு சமாளித்த சுவாரஸ்யம்!…

Next Story