பணிப்பெண்ணை தள்ளிப் போக சொன்ன காரணமே இதுதான்! அம்பானி வீட்டு திருமணத்தில் நடந்த சம்பவம்
Ambani Rajini: ஒட்டுமொத்த இந்திய பிரபலங்களை ஒரே நேரத்தில் பார்க்க வேண்டுமென்றால் அம்பானி வீட்டு திருமண விழாவிற்கு சென்றால் பார்க்க முடியும். இந்தியாவின் தொழிலதிபர்களில் நம்பர் ஒன் தொழிலதிபராக இருப்பவர் அம்பானி. இவருடைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண வைபவங்கள் மிகவும் கோலாகலமாக குஜராத்திலுள்ள ஜாம் நகரில் நடந்து வருகிறது.
திரைத்துறையில் இருந்து கிரிக்கெட் துறை மற்றும் எல்லா துறைகளிலும் இருக்கும் பல முக்கிய பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர். பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அந்தந்த மொழிகளில் சிறந்துவிளங்கக் கூடிய பல முக்கிய பிரபலங்கள் ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். தனித்தனி அறைகள், அவர்களை தனித்தனியாக கவனிக்க பிஆர்ஓக்கள் என உலகமே வியக்கும் அளவுக்கு அம்பானி தனது மகன் திருமணத்தை நடத்த இருக்கிறார்.
இதையும் படிங்க: கொண்டாடப்படும் மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் ரியல் ஹீரோஸ்!.. நண்பேன்டா ஸ்டைலில் கலக்குறீங்களே …!
தமிழில் இருந்து ரஜினி மற்றும் அட்லீ ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்டனர். பாலிவுட் முழுவதும் அம்பானி வீட்டில்தான் குத்தாட்டம் போட்டு வருகின்றனர். இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவிலும் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் அம்பானி. பில்கேட்ஸும் இதில் அடக்கம். இந்த நிலையில் ரஜினி தன் மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
போகும் போது தன் வீட்டு பணிப்பெண்ணையும் அழைத்துச் சென்றார். அதில் குடும்ப புகைப்படம் எடுக்கும் போது கூடவே அந்த பணிப்பெண் வருவதும் உடனே ரஜினி அவரை தள்ளிப்போக சொல்வது மாதிரியும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இதை பற்றி உடனே விமர்சனங்களும் எழுந்தன. ரஜினி செய்தது சரிதானா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: சிவாஜி ஹீரோவாக நடிக்க இருந்த படத்தில் நாகேஷா? போட்ட சவால் எல்லாம் போச்சே.. இது தேவையா?
இதற்கு பதிலளித்த மூத்த பத்திரிக்கையாளரான சுபேர் ‘பணிப்பெண்ணை மும்பை வரை விமானத்தில் அதுவும் தன்னுடனேயே அழைத்துச் செல்லும் அளவிற்கு மிகவும் பெருந்தன்மையாகத்தான் இருந்திருக்கிறார் ரஜினி. ஆனால் அந்தப் பணிப்பெண்ணை தள்ளிப் போக சொல்ல காரணம் ஒரு குடும்பப் புகைப்படம் எடுக்கும் போது யாரா இருந்தாலும் ஏன் நண்பராக இருந்தாலும் கொஞ்சம் இருங்கள். எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்வது தான் வழக்கம். அதைத்தான் ரஜினியுன் செய்திருக்கிறார்.’
இதில் என்ன தவறு இருக்கிறது என சுபேர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்படி வேறு மாதிரி நினைத்திருந்தால் பில்கேட்ஸ் கலந்து கொள்ளும் திருமணத்திற்கு தனது பணிப்பெண்ணை அழைத்தே வந்திருக்க மாட்டார் அல்லவா? உடனே இதை பெரிய நியூஸா போட்டு பரப்பிட்டாங்க என சுபேர் கூறினார்.
இதையும் படிங்க: குணா படம் உருவானபோது நடந்த அடிதடி!.. கமல் படங்களில் ஜனகராஜ் நடிக்காமல் போனதன் பின்னணி!..