எம்.ஆர்.ராதாவின் அந்த ரெண்டு திறமைகள்... எம்ஜிஆரே கண்டு வியந்த அதிசயம்...
எம்ஜிஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா என இந்த மூவரும் தான் என் வாழ்க்கையில் மும்மூர்த்திகள் என்று சொல்வேன் என்கிறார் நடிகர் ராஜேஷ். இவர் எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவியிடம் சில கேள்விகளைக் கேட்கிறார். அதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று பார்க்கலாம்.
நான் எங்க அப்பாவுக்காக சொல்லல. அவரு ஹாலிவுட் படம் எல்லாம் பார்த்தது கிடையாது. மீசையை அவருக்குப் பிடிக்கிற ஸ்டைல்ல வைக்கிறது. விக்கை அவரே டிசைன் பண்றது. அது கண்றாவியா இருந்தாலும் அவருக்குத் தான் அது பொருந்தும்.
இதையும் படிங்க... விஜயின் மகள் பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா? ஷோபா சொன்ன ஹார்ட் டச்சிங் தகவல்
முத்துராமலிங்கம் தேவர் ஐயாவுக்கு எங்க அப்பா ரொம்ப நெருக்கம். அதுவே ரொம்ப பேருக்குத் தெரியல. அவர் 63ல இறந்தாரு. பெரியாரைத் திட்டினதனால தேவரய்யாவைத் திட்டிப் போட்டாரு. அவங்க ஆளுங்க எல்லாம் அரிவாள எடுத்துட்டு வந்துட்டாங்க. அப்புறம் அவரே வந்து அப்படிப்பட்ட ஆளு எல்லாம் அவரு இல்லன்னு சொல்லி அனுப்பினாராம். ஒருமுறை நீங்க என்ன தெலுங்குகாரரான்னு கேட்க, ஆமாங்கன்னு சொன்னாரு அப்பா. அப்புறம் நாடகத்துல ஏதும் தகராறுன்னா ஆளுங்களை அனுப்பி ஒத்துழைப்பு கொடுத்தாரு.
இயற்கையாகவே கார் மெக்கானிசம், எலெக்ட்ரீசியன் ஆகிய வேலைகளையும் கத்துக்கொண்டது ஆச்சரியம். அதுவும் ஜீனியஸ் லெவல்ல கத்துக்கிட்டாராம். எம்ஜிஆரே இவரை இதற்காகப் பாராட்டியுள்ளாராம்.
இதையும் படிங்க... விழுந்தாலும் பாதாள குழியிலதான் விழுவேன்! தனுஷால எவ்வளவு பட்டாலும் திருந்தாத தயாரிப்பாளர்
எனக்கு சிவாஜி படம் ரொம்ப பிடிக்கும். அவரோட ரசிகர் தான். ஆனா, எம்ஜிஆரைத் தான் ரொம்ப பிடிக்கும். அவர் உண்மையா வாழ்ந்தார். பொய்யில்ல. நடிப்பு இல்ல. சாதாரணமா இருப்பாரு. எம்ஜிஆர் வந்துருக்காருன்னா அவரைப் பார்க்க ஓடுவேன். சிவாஜி வர்றது ஒரு மாதிரியா இருக்கும். வேஷம் போட்டாரு. சிங்கம் தான். அந்தக் கதாபாத்திரமாவே மாறிடுவாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றால் தான் பிள்ளையா படத்தில் எம்ஆர்.ராதாவைப் போல எம்ஜிஆர் ஒரு காட்சியில் நடித்துக் காட்டுவாராம். எம்.ஆர்.ராதாகிட்ட இருந்து நிறைய விஷயங்களை நாம் எடுத்துக்கலாம்னு அவரே சொல்லி இருக்கிறாராம்.