காக்க காக்க படத்துக்கு நோ சொன்ன மூன்று முன்னணி நடிகர்கள்… சரியாக கொக்கி போட்ட ஜோதிகா!...
Khakka Khakka: நடிகர் சூர்யா மாஸ் ஹிட் திரைப்படமான காக்க காக்க திரைப்படம் அவருக்கு கிடைக்க ஜோதிகா தான் காரணம் என பலருக்கு தெரியும். ஆனால் இந்த படத்தினை மிஸ் செய்த முன்னணி நடிகர்கள் குறித்தும் ஆச்சரியமான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
காக்க காக்க படத்தில் முதலில் முடிவானது ஜோதிகா தான். அந்த சமயத்தில் ஹீரோ ஒப்பந்தம் ஆகவில்லையாம். கௌதம் வாசுதேவ் மேனன் அஜித், விஜய், விக்ரம், மாதவன் உள்ளிட்ட நான்கு முன்னணி நடிகர்களுக்கு காக்க காக்க படத்தின் கதையை சொல்லினாராம். ஆனால் நால்வருமே வெவ்வேறு காரணங்களை கூறி இந்த படத்தை மறுத்துவிடுகின்றனர்.
இதையும் படிங்க: கூச்சப்பட்ட நடிகை!. சம்பளத்தை கொடுத்து விரட்டிவிட்ட இயக்குனர்!.. காதலிக்க நேரமில்லை அப்டேட்!..
இதில் அஜித் எனக்கு போலீஸ் கதாபாத்திரம் வேண்டாம் எனக் கூறினாராம். அதையேதான் விக்ரமும் கூறினாராம். ஆனால் அடுத்த ஆறு மாதத்தில் சாமி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் மட்டும் தனக்கு இந்த கதை எப்படி வரும் என தெரியவில்லை. எனக்கு செட்டாகாது எனக் கூறி விலகி விட்டாராம். மாதவனும் நோ சொல்லி இருக்கிறார்.
அந்த சமயத்தில் தான் ஜோதிகா தயாரிக்கும் ஒரு படத்துக்காக பேச கெளதம் மேனனை பார்க்க வந்தாராம். அப்போ இந்த கதையை குறித்து பேசி இருக்கின்றனர். உடனே ஜோதிகா, சூர்யாவின் நந்தா படம் ரிலீஸாக இருக்கிறது. அதை பார்த்துவிட்டு நீங்க அவரிடம் பேசுங்கள் என்றாராம்.
இதையும் படிங்க: காலையில் ஐடி ஆபிஸ்.. மாலையில் டைரக்டர் வாசல்… கௌதம் வாசுதேவ் மேனனின் ஆரம்பகாலம் இவ்வளோ மோசமா?
அதை தொடர்ந்தே, காக்க காக்க படத்தின் கதையை சூர்யா கேட்டாராம். ஆனால் அப்படத்திற்கு முன்னரே மின்னலே படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க சிவக்குமாரிடம் கதை சொல்லி இருக்கிறார் வாசுதேவ் மேனன். திரதிஷ்டவசமாக அந்த படம் நடக்காமல் போனது. அதை தொடர்ந்தே காக்க காக்க படத்தில் சூர்யா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.