‘பழசையெல்லாம் பைத்தியக்காரர்கள்தான் நினைவில் வைத்துக் கொள்வார்கள்’ என்று ஏதோ ஒரு சினிமாவில் ஒரு வசனம் வரும். அது சினிமா உலகிற்கு மிகவும் பொருந்தும். சினிமா உலகில் பழசை மறப்பவர்கள், நன்றி மறப்பவர்கள் ஏராளம். சினிமாவுக்குள்ளே நுழைய வேண்டும் என்கிற ஆசையில் பலரிடமும் உதவி கேட்பார்கள். அவர்களை வளர்த்து விட ஒருவர் வந்து பல உதவிகளை செய்வார்.
வாய்ப்புகளை வாங்கி கொடுப்பார். ஆனால் வாய்ப்புகள் கிடைத்து ரசிகர்களிடம் பிரபலமாகி, வெற்றி படங்களை கொடுத்து முன்னேறிய பின் வளர்த்துவிட்டவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் வளர்த்து விட்டவர்களை சந்திப்பதை கூட தவிர்த்து விடுவார்கள். சினிமாவில் 90 சதவீதம் பேர் இப்படித்தான். எல்லோருமே நன்றியுணர்ச்சியுடன் இருக்கமாட்டார்கள்.
இப்படி சினிமாவில் பல உதாரணங்கள் உண்டு. சிவகார்த்திகேயனை பொறுத்தவரை விஜய் டிவியில் ஆங்கராக இருந்து அதன்பின் சினிமாவில் நுழைந்தவர். அவரின் ஆரம்பகால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் தனுஷ். தான் நடித்த 3 திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார்.

அதன்பின் தனது சொந்த தயாரிப்பில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக போட்டு எதிர் நீச்சல் என்கிற படத்தையும் தயாரித்தார். இந்த படத்திற்கு பின்னர்தான் சிவகார்த்திகேயன் கவனிக்கப்பட்டார். மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து காக்கி சட்டை என்கிற படத்தையும் தனுஷ் தயாரித்தார்.
ஆனால் சிவகார்த்திகேயன் வளர்ந்த பின் தனுஷுக்கும் அவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. போனில் பேசுவதை கூட இருவரும் தவிர்த்து விட்டனர். தனுஷ் தன்னை விட்டு விலகி இருப்பது சிவகார்த்திகேயனுக்கு கொஞ்சமும் உறுத்தவில்லை. அதேநேரம் தனுஷ் மூலம் தனக்கு அறிமுகமான அனிருத்துடன் நெருக்கமானார் சிவகார்த்திகேயன். அவரின் பெரும்பாலான படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். அதனால்தான் அனிருத்துடனும் தனுஷ் பேசுவதில்லை.
தற்போது சிவகார்த்திகேயன் பனையூரில் மூன்று ஏக்கரில் ஒரு பெரிய ஆடம்பர பங்களாவை கட்டி வருகிறார். அதில் தனக்கென ஒரு ஜிம்மையும் அவர் அமைத்து வருகிறார். அப்படியே பிளாஷ்பேக் போனால் சிவகார்த்திகேயன் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது சென்னை வளசரவாக்கத்தில் தங்கி இருந்தார். அப்போது கோட்டூர்புரத்தில் உள்ள ஜிம்மில் சிவகார்த்திகேயனை தனது காசை கட்டி சேர்த்து விட்டார் தனுஷ், வளசரவாக்கத்திலிருந்து கோட்டூர்புரத்திற்கு தினமும் போய் ஒர்க்அவுட் செய்து விட்டு வருவார் சிவகார்த்திகேயன். அப்படிப்பட்ட சிவகார்த்திகேயன் தற்போது வீட்டிலேயே ஜிம் வைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
