நாங்களே டிக்கெட் வாங்கிப்போம்.. படம் பக்கா வசூல் சொல்லிப்போம்… இந்த படமா?
Cinema Ticket: தமிழ் சினிமாவில் சில படங்களுக்கு வசூலை கூட்டி சொல்ல சில தயாரிப்பாளர் செய்யும் ட்ரிக்கை கேட்டு பலரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். அட இந்த மொக்க படத்துக்கு கூட தியேட்டர் புல்லுனு வந்ததன் பின்னணி இதுதானா என பலரும் வாயின் மீது கைவைக்கின்றனர்.
கோலிவுட்டில் ரிலீஸாகும் சமீபத்திய தமிழ் படங்கள் எல்லாம் வசூல் ரீதியாக வெற்றி படைப்பதாக கூறப்படுகிறது. இது எல்லாமே ஒரு பிம்பம் தான். அப்படியெல்லாம் இல்லை. வசூலை கூட வேணாம். மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக வெற்றி என சொல்ல வைக்கணும் என நினைக்கிறார்கள்.
இதையும் படிங்க: அப்டேட் உங்க இஷ்டத்துக்கெல்லாம் தர முடியாது… வரப்ப கண்டிப்பா வரும்.. சேரன் கொடுத்த ஷாக்!
அதற்கு ஒரு திரையரங்கில் உள்ள எல்லா டிக்கெட்டினை தயாரிப்பு நிர்வாகமே முழுமையாக புக் செய்து விடுவாராம். அதனால் அந்த ஷோவே ஹவுஸ் ஃபுல் என போக்குகாட்டி விடுவார்கள்.
இந்த ட்ரிக்கை பயன்படுத்தி தான் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் சென்னை ரிலீஸில் சந்தானமும், தயாரிப்பு நிறுவனமும் இரண்டு திரையரங்குகளை முழுசாக ஒரு புல் ஷோவை புக் செய்தனர். அப்படி செய்துதான் அப்படத்திற்கு விமர்சனம் நல்லதாக வந்ததாம்.
இதையும் படிங்க: ‘இந்தாம்மா ஏய்’ மாரிமுத்து திடீர் மரணம்… இன்னும் எத்தன பேர காவு வாங்குமோ!…
இதைப்போலவே கே.ஜி.எஃப் படமும் பீஸ்ட் படமும் ஒரே நேரத்தில் ரிலீஸானது. ஆனால் பீஸ்ட்டுக்காக இந்த ட்ரிக்கை சன் பிக்சர்ஸ் செய்யாமல் கே.ஜி.எஃப்க்கு காட்சிகளை அதிகப்படுத்தியது விஜயிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாம். இதனால் தான் சில ஷோக்கள் மொக்க படத்திற்கு ஃபுல் என காட்டப்படுகிறதோ என பலரும் கிசுகிசுக்கின்றனர்.