
Cinema News
நாளை வெளியாகும் தமிழ்ப்படங்கள் – ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்
வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆனா தமிழ்ப்படங்கள் வரிசைகட்டி வந்து ரிலீஸ் ஆகின்றன. அதே போல ஓடிடி தளத்திலும் போட்டிப் போட்டுக்கொண்டு படங்கள் வந்துவிடுகின்றன. இந்த வாரம் என்னென்ன ரிலீஸ்னு பார்க்கலாமா…
7 படங்கள்: ராகவா லாரன்ஸ் நடிப்பில் பென்ஷ் படமும், புகழ், காஞ்ச்வாலா ஆகியோரது நடிப்பில் மிஸ்டர் ஷூ கீப்பர் படமும் நாளை வெளியாகிறது. அதே போல விவேக், பிரசன்னா. சாந்தினி, தமிழரசன் ஆகியோரது நடிப்பில் ட்ராமா என்ற படமும், சசிக்குமார், யோகிபாபு ஆகியோரது நடிப்பில் எவிடன்ஸ் படமும் நாளை திரையரங்குகளில் வெளியாவதாகத் தெரிகிறது. இவை தவிர பேய் கொட்டு, அஸ்தம், எனை சுடும் பனி ஆகிய படங்களும் ரிலீஸ் ஆவதாகத் தெரிகிறது.
எனை சுடும் பனி: இவற்றில் எனை சுடும் பனி யை ராம் சேவா இயக்கியுள்ளார். இது ஒரு ஆக்ஷன் படம். மர்மமான முறையில் ஒரு காதல் ஜோடி சிக்கி விடுகிறது. அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் கதை. நடராஜ் சுந்தரராஜ், பாக்கியராஜ் மற்றும் உப்சான் ஆகியோர் நடித்துள்ளனர். மிக்கின் அருள்தேவ் இசை அமைத்துள்ளார். ஹேமலதா சுந்தரராஜ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திகில் படங்கள்: இப்போதெல்லாம் திகில் படங்கள் பஞ்சமில்லாமல் வாரம்தோறும் வந்த வண்ணம் இருக்கிறது. இது திகில் ட்ரெண்ட் ஆகி விட்டது. 2கே கிட்ஸ்;களைக் கவர காதல் ரொமான்டிக், ஆக்ஷன் டிராமா வகைப் படங்கள் தான் அதிகளவில் ரீச்சாகின்றன. அதே நேரம் படத்தில் பட்ஜெட் அவர்களுக்குப் பெரிய பிரச்சனையே இல்லை.

dragon
சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் குடும்பஸ்தன், டிராகன் மாதிரி ரசிக்கும் வகையில் இருந்தால் படத்தை நிச்சயமாக ஓட வைத்துவிடுவார்கள். அந்த வகையில் நாளை வெளியாகும் படங்களில் ஜெயிப்பது எது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஓடிடியில் நாளை வெளியாகும் படங்கள்: நெட் பிளிக்ஸில் டிராகன், அமேசான் பிரைமில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், சன் நெக்ஸ்ட் தளத்தில் பேபி அண்ட் பேபி, டென்ட் கொட்டாவில் பயர் ஆகிய படங்கள் வெளியாகிறது.