Cinema News
லியோவுக்கு லாக் வைச்சாச்சு… என்னடா திரையில ஓடுனதெல்லாம் தரையில நடக்குது!..
லியோ படத்தின் வசூலை குறைக்க தமிழ்சினிமா மட்டுமல்ல பல மொழி பிரபலங்களும் ரஜினிக்காக கைகோர்த்து இருப்பது போல தற்போது ஒரு சூழல் கோலிவுட்டில் உருவாகி இருக்கிறது. இதனால் படக்குழு மிகுந்த கவலையில் இருப்பதாகவும் தகவல்கள் இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. இப்படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் கதை குறித்து லோகேஷ் மிகுந்த கவனமாக இருக்கின்றார். இதனால் படத்தின் கலைஞர்கள் யாருமே பேட்டியில் இதுகுறித்து பேசுவதாக இல்லை. கவனமாக இருக்கின்றனர்.
இதையும் படிங்க : ஊருக்கு மட்டும் தான் உபதேசமா.. ஜெயிலர்ல ரஜினி பண்ணது ரொம்ப தப்பு- கட் அண்ட் ரைட்டா சொன்ன தயாரிப்பாளர்..
படத்தின் ரிலீஸ் தீபாவளிக்கு ப்ளான் செய்து இருக்கின்றனர். வார இறுதி மற்றும் விடுமுறை தினத்தில் படத்தின் வசூல் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்ற ஐடியாவில் இருந்த படக்குழுவிற்கு இடி விழுந்து இருக்கிறது. பல மொழியின் முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் படங்களையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
தீபாவளிக்கு துருவ நட்சத்திரம் படத்தினை ரிலீஸ் செய்ய ஒரு திட்டம் படக்குழுவிற்கு இருக்கிறது. தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படம், ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் தீபாவளி ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. மறுபுறம் ஜெய்லரில் மாஸ் புகழில் இருக்கும் சிவராஜ்குமாரின் கோஸ்ட் படமும் தீபாவளி ரிலீஸை குறி வைத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆரால் பிரபலமாகி அவருடனே நடிக்க மறுத்த நடிகைகள்!.. அட இத்தனை பேரா?!..
இது லியோவின் தியேட்டர் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும். இதனால் படத்தின் வசூலும் பெரிய அளவில் அடிப்பட வாய்ப்பு இருக்கிறது. அந்தந்த மொழி ஆடியன்ஸ்கள் தங்களின் நாயகர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இருந்தாலும் ஜெய்லர் படத்துடன் வந்த எந்த படமும் ஒரு ஷோவை தாண்டவில்லை. இதனால் லியோ கதை தான் முக்கியமாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அமெரிக்காவில் லியோவிற்கு அதிக ஸ்கீரின்கள் கேட்கப்பட்டது. ஆனால் தற்போது பாலையா மற்றும் ரவிதேஜாவின் படத்தால் அதுவும் பாதிப்படைந்து இருக்கிறது. இருந்தும் நல்ல கதையாக இருந்தால் லியோவால் சாதிக்க முடியும். ஜெய்லர் படத்தில் ரஜினிக்கு வேற்று மொழி வில்லன்களாக வந்து மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் உதவி செய்தது போல ஜெய்லர் வசூலை லியோ முந்தக்கூடாது என்பதற்கே தற்போது இத்தனை படங்கள் தீபாவளிக்கு களமிறக்கப்படுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.