Connect with us

Cinema History

முகத்தை காட்டாமல் சினிமாவில் ஃபேமஸான டாப் 5 கதாபாத்திரங்கள்… உங்க ஃபேவரிட்டும் இருக்காங்க?

தமிழ் சினிமாவில் சில கதாபாத்திரங்கள் நடிக்கலாம் வேண்டாம். பெயர் சொன்னாலே போதும் எல்லாருக்குமே தெரியும். அதிலும் அந்த கதாபாத்திரம் வந்தது என்னவோ ஒரு படத்தில் தான் இருக்கும். ஆனால் வருடங்கள் பல கடந்தாலும் அந்த கதாபாத்திரத்தின் பிரபலம் மட்டும் குறையவே குறையாது.

சொப்பன சுந்தரி:

தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை தான் சொப்பன சுந்தரி. கரகாட்டக்காரன் படத்தில் இருந்த காரை சொப்பன சுந்தரியிடம் இருந்து வாங்கியதாக கவுண்டமணி சொல்லுவார். அவரிடம் செந்தில் நீங்க காரை வச்சிருக்கீங்க. சொப்பன சுந்தரிய யாருன வச்சிருக்கா எனக் கேட்பார். அப்போது நடந்த அந்த காட்சி இன்று கேட்டாலும் பலரும் மனப்பாடமாக கூறுவார்கள். பல வருடமாக அந்த முகம் தெரியாத சொப்பன சுந்தரியை இன்னும் பலர் மறக்கவே இல்லை.

கிரி பட வடிவேலு அக்கா:

இந்த கதாபாத்திரம் எதேர்ச்சையாக தொடங்கப்பட்டது என்றாலும் கதையுடனே பயணித்து இருக்கும். அதிலும் அப்படத்தில் வடிவேலு சொல்லும் மாடுலேஷனை பார்த்து வயிறு வலிக்க சிரித்தவர்கள் தான் ஏராளம்.

இதையும் படிங்க: அஜித் vs விஜய்: இதுக்கு முன்னாடி எத்தனை படங்களில் மோதி இருக்காங்க.. யாருக்கு அதிக வெற்றி.. சுவாரஸ்ய தகவல்

கோபாலு:

இந்த வார்த்தையை கேட்டாலே டக்கென சந்திரமுகி வீட்டோட பெயிண்டர் கோபாலு ஞாபகம் தான் வரும். ஆனா கடைசி வரை அந்த பெயிண்டரை காட்டவே இல்லை என்றாலும் அவர் பேரு பலருக்கும் பரிச்சயம் தான். அதிலும் வடிவேலு ஸ்டைலில் கோபாலு, கோபாலு எனக் கூப்பிடும் போது பட ரிலீஸ் டைமில் தியேட்டரே குலுங்கி சிரித்தது.

தங்கபுஷ்பம்:

வேலையில்லா பட்டதாரி படத்தில் விவேக்கின் மனைவியாக சொல்லப்பட்ட கதாபாத்திரம் தான் தங்கபுஷ்பம். செல்முருகனும் அவர் கதாபாத்திரம் குறித்து காமெடியாக கூறி இருப்பார். முகமே காட்டாத இந்த கதாபாத்திரமும் செம ஹிட் அடித்தது.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் எதிர் வீட்டு அக்கா:

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படம் தான் இதற்கு தானே ஆசைப்பட்டாய். நடிப்பில் விஜய் சேதுபதி மாஸ் காட்டி இருக்கும் இந்த படத்தில் முகம் காட்டாமல் ஒரு கை மட்டும் நடித்திருக்கும். இதில் நாயகி நந்திதாவின் ஆபிஸ் ஃப்ரண்ட் ஒருவர் அவரை பைக்கில் அழைத்து வந்திருப்பார். அப்போ விஜய் சேதுபதி இவரின் மீது உள்ள கடுப்பை வண்டியில் காட்டி இருப்பார். அப்போ எதிர் வீட்டு அக்கா தன் கையை மட்டும் ஆட்டி தம்பி போயிடு எனச் சொல்லுவார். அந்த வாய்ஸ் மாடுலேஷனுக்கே இந்த கதாபாத்திரமும் ஹிட் அடித்தது.

google news
Continue Reading

More in Cinema History

To Top