Connect with us

Cinema News

ஒருவழியா சம்பள பாக்கி வந்துடுச்சா!.. லியோவுக்கு திடீரென தயவு காட்டிய த்ரிஷா.. என்ன ஆச்சு?..

நடிகை த்ரிஷா லியோ படத்தை கண்டுக் கொள்ளாமல் இருந்து வந்த நிலையில், முதன் முறையாக தனது போஸ்டர் இன்று வெளியிடப்பட்ட நிலையில், அதனை மட்டும் தனது ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்களில் போஸ்ட் செய்துள்ளார்.

விஜய்யுடன் லியோ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை வரமாக நினைத்து வந்த த்ரிஷா ஏகப்பட்ட வதந்திகளில் சிக்கி பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில், லியோ படத்தில் இருந்தே தன்னை முழுவதுமாக விலக்கிக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களை நம்பி உள்ளே விட்டதுக்கு!.. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டீங்க.. தியேட்டர் காலி!..

லியோ படத்தின் செகண்ட் சிங்கிளான பேடாஸ் பாடல் ரிலீஸ் ஆன போதும், லியோ ட்ரெய்லர் அறிவிப்பு வெளியானதும் மெளனம் காத்து வந்த த்ரிஷா தற்போது ஒரு வழியாக லியோ பட புரமோஷனை தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டா வெறுப்பாக செய்து வருவது கண் கூடாக தெரிகிறது.

லியோ படத்தில் இடம்பெற்ற தனது போஸ்டரை மட்டும் போஸ்ட் செய்த த்ரிஷா லியோ படத்தின் டிரெய்லரை வெறும் ரீபோஸ்ட் மட்டுமே செய்திருக்கிறார். நடிகை த்ரிஷாவுக்கும் சம்பள பாக்கியை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தராமல் வைத்திருந்ததா? தற்போது தான் செட்டில் செய்து விட்டனரா என த்ரிஷாவின் திடீர் லியோ பாசத்தை பார்த்து ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: என்னடா தீபாவளியே வந்த மாதிரி இருக்கு!.. லைஃப் டைம் செட்டில்மெண்ட்!.. லியோ டிரெய்லர் எப்படி இருக்கு?..

படத்தின் புரமோஷன் எதுவும் இல்லாத நிலையில், ஜாலியாக அஜித்தின் விடாமுயற்சி படத்திற்காக அஜர்பைஜானில் ஆல்ட் ஆகி உள்ளார் த்ரிஷா என்பது கூடுதல் தகவல்.

லியோ படத்தின் ட்ரெய்லரில் த்ரிஷா வரும் சில காட்சிகளிலும் செம பர்ஃபார்மன்ஸ் என அவரது ரசிகர்கள் த்ரிஷாவை பாராட்டி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top