எம்ஜிஆர் பட தயாரிப்பாளரை சகட்டு மேனிக்குத் திட்டிய வாலி… தலைவரோட ரியாக்ஷன் என்ன தெரியுமா?

Published on: November 30, 2024
mgr vaali
---Advertisement---

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த பல படங்களில் பாட்டு எழுதியவர் வாலிபக் கவிஞர் என்றழைக்கப்படும் வாலி. இவர் ஒருமுறை எம்ஜிஆரின் படத் தயாரிப்பாளரிடமே கோபத்தில் எரிந்து விழுந்துள்ளார். அப்படி என்னதான் நடந்ததுன்னு பார்க்கலாமா…

எம்ஜிஆர் நடித்த அன்னமிட்ட கை படத்தின் தயாரிப்பாளர் சிவசாமி. ஒரு சமயம் வாலியின் மனைவிக்கு பிரசவம் நடக்கிறது. அதுவும் ஆபரேஷன் தான். அதனால் வாலி ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டு இருக்கிறார். அந்த சமயம் அவருக்கு ஒரு போன் வருகிறது. இங்கு இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவன் உள்பட பலரும் இருக்காங்க.

தயாரிப்பாளர் நக்கல்

Also read: பாலிவுட் என்ட்ரி!.. மும்பை பிரமோஷனில் ஓபனாக பேசிய அல்லு அர்ஜுன்.. அப்படி என்ன சொன்னாரு?..

‘நீங்க இங்க வந்தா நைட் 8 மணிக்குள்ள பாட்டு எழுதிடலாம். நானும் நாளைக்கே ரெக்கார்டு பண்ணிடுவேன். நாளை மறுநாள் தேவிக்குளம் பீர்மேடுல சூட்டிங். அதனால நீங்க இப்போ வரணும்’ என்றார்.

அதற்கு வாலி ‘என்ன சார் என் மனைவிக்கு ஆபரேஷன் நடக்கப் போகுது. நானே பதற்றத்தில் இருக்கிறேன். இப்போ பாட்டெல்லாம் எழுத வாய்ப்பே இல்லை. அவசரம்னா வேற ஏற்பாடு பண்ணுங்க’ன்னு சொல்லிட்டாராம்.

mgr vaali
mgr vaali

அதற்கு தயாரிப்பாளர் படக்குன்னு நக்கலாக, ‘ஆபரேஷனை நீரா பண்ணப் போறீர்..’னு கேட்டுட்டாராம். வாலிக்கு வந்ததே கோபம். ‘யோவ் போனை கீழே வையிடா. அடிச்சு உதைச்சிடுவேன்’னு கோபத்தில் கத்தி விட்டாராம்.

ஒரு பவுன் தங்க காசு

மறுநாள் எம்ஜிஆர் வாலிக்குப் போன் பண்ணுகிறார். நான் பாட்டைத் தள்ளி வச்சிக்கறேன். உங்க கோபம் நியாயமானது தான் என்றாராம். அப்புறமாக அவர் ஆஸ்பத்திரிக்குப் போய் அவரது குழந்தை கையில் ஒரு பவுன் தங்க காசைக் கொடுத்தாராம். பாட்டுக்கு இப்போ அவசரமில்லை என்ற அவர் 2 நாள்கள் கழித்து வாலியிடம் பாட்டை எழுதி வாங்கினாராம்.

எம்ஜிஆர் – வாலி படங்கள்

Also read: என்கூட வந்த SK. பெரிய ஆளாயிட்டாரு… நான் அப்படியே இருக்கேன்… குமுறும் நடிகர்

எம்ஜிஆர் நடித்த குமரி கோட்டம், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள், பெற்றால் தான் பிள்ளையா, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், தாழம்பூ, சந்திரோதயம், குடியிருந்த கோயில், தேர் திருவிழா, ஒளி விளக்கு, அடிமைப் பெண், என் அண்ணன், எங்கள் தங்கம் உள்பட பல சூப்பர்ஹிட் படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார் வாலி.