Connect with us
vijayakanth

Cinema History

நான் சொல்ற சம்பளத்துல நீங்க நடிப்பீங்களா?!.. விஜயகாந்திடம் எகிறிய வடிவேலு..

Vijayakanth vadivelu: விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கும் இருந்த பிரச்சனை என்ன என்பதும், விஜயகாந்தை வடிவேலு எப்படியெல்லாம் அரசியல் பிரச்சாரத்திலும், மேடைகளிலும் விமர்சித்தார் என்பதையும் மக்கள் பார்த்துள்ளனர். அப்போது முதலே வடிவேலுவுக்கு ஏழரையும் துவங்கியது. 4 வருடங்கள அவரை திரையுலகம் ஒதுக்கி வைத்தது.

விஜயகாந்தை எதிரியாக வடிவேலுதான் பார்த்தாரே தவிர விஜயகாந்த் வடிவேலுவை அப்படி பார்க்கவில்லை. அதுதான் அவரின் பக்குவம். தன்னை மோசமாக வடிவேலு திட்டியபோதும் அவரை பற்றி மேடைகளில் எதுவும் பேசவேண்டாம் என தனது கட்சிகாரார்களிடம் சொல்லியவர்தான் விஜயகாந்த். அதோடு, அவர் நடிக்காமல் இருந்தபோது ‘வடிவேலு ஒரு நல்ல நடிகன். அவர் கண்டிப்பாக தொடர்ந்து நடிக்க வேண்டும்’ என சொன்னவர்தான் விஜயகாந்த்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு ‘புரட்சிக் கலைஞர்’ பட்டம் எப்படி வந்தது தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்…

ஆனால், அந்த பக்குவம் எல்லாம் வடிவேலுவுக்கு இல்லை. கடைசி வரைக்கும் விஜயகாந்தின் மீது வன்மத்துடனேயே இருந்தார். வடிவேலுவின் வீட்டின் முன்பு விஜயகாந்தின் கட்சிக்காரர் ஒருவர் காரை நிறுத்த, இதில் கடுப்பான வடிவேலு அவர்களிடம் சண்டைக்கு போக அது பிரச்சனையில் முடிந்தது. இதுதான் காரணம் என பலரும் நினைப்பார்கள்.

vadivelu

ஆனால், அதற்கு முன்பே விஜயகாந்தை பிடிக்காதவராகத்தான் வடிவேலு இருந்துள்ளார். மணிரத்தினத்தின் அண்ணனின் நிறுவனமான ஜிவி பிலிஸ் பல வருடங்களுக்கு பின் சினிமாவை எடுக்க நினைத்து உருவான படம்தான் சொக்கத்தங்கம். பாக்கியராஜ் இயக்கிய அப்படத்தில் காமெடிக்கு முதலில் நடிக்கவிருந்தவர் வடிவேலு. அப்போது வடிவேலு பீக்கில் இருந்தார். எனவே, அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என பாக்கியராஜும், விஜயகாந்தும் நினைத்தனர்.

இதையும் படிங்க: மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

ஆனால், விஜயகாந்தை விட அதிக சம்பளத்தை கேட்டுள்ளார் வடிவேலு. இதுகேட்டு தயாரிப்பு நிறுவனமே அதிர்ச்சி அடைந்தது. இந்த விவகாரத்தை அவர்கள் விஜயகாந்திடம் சொல்லிவிட்டார்கள். சில நாட்களில் மதுரை விமான நிலையத்தில் வடிவேலும், விஜயகாந்தும் சந்தித்துக்கொண்டனர். அப்போது விஜயகாந்த் ‘ஜிவி பிலிம்ஸ் ஒரு பெரிய நிறுவனம். கொஞ்சம் சம்பளத்தை குறைத்து கொண்டு இதில் நடி’ என சொல்லியிருக்கிறார்.

அப்போது வடிவேலு ‘அப்படியா.. நான் ஒரு படம் சொல்றேன்.. அதுல நான் சொல்ற சம்பளத்தை வாங்கிகிட்டு நீங்க நடிக்கிறீங்களா?’ என கேட்டிருக்கிறார். விஜயகாந்த் நினைத்திருந்தால் அதே இடத்தில் அவரை பளார் என ஒன்று விட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. இவருக்கு நம்மோடு நடிக்க விருப்பமில்லை என்பதை புரிந்துகொண்டு அவரை கடந்து சென்றுவிட்டார். அதன்பின் சொக்கத்தங்கம் படத்தில் கவுண்டமணியும், செந்திலும் நடித்தனர்.

விஜயகாந்த் மனதில் எப்போதும் வன்மம் இருந்ததே இல்லை. எல்லோருக்கும் நன்மை செய்ய நினைக்கும் விஜயகாந்துக்கும் அது எப்போதும் வராது. கடைசிவரை தலைக்கணத்தையும், வன்மத்தையும் சுமந்து கொண்டு அலைந்த வடிவேலுவோ இப்போதுவரை எல்லோரிடம் திட்டு வாங்கி கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: சூர்யாவின் திருமணத்திற்கு வர மறுத்த விஜயகாந்த்! படத்துல நடிச்சுக் கொடுத்தவரு ஏன் வரலனு தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top