வாலியை கொசு என எழுதிய பத்திரிக்கையாளர்!. அவரிடம் வாலி சொன்ன கமெண்ட்டுதான் ஹைலைட்!..

by சிவா |   ( Updated:2024-02-09 05:25:41  )
vali
X

50களில் தமிழ் சினிமாவில் பாடல்களை எழுத துவங்கியவர் கவிஞர் வாலி. இவர் சினிமாவில் பாடல் எழுத முயற்சி செய்து கொண்டிருந்தபோது கவிஞர் கண்ணதாசன் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல பெரிய நடிகர்களுக்கும் அவர்தான் பாடல்களை எழுதினார்.

காதல், தத்துவம், நகைச்சுவை, சோகம், அழுகை, விரக்தி, ஏமாற்றம் என மனித உணர்வுகளை அழகாக பாடல் வரிகளில் பிரதிபலித்தார். ஒரு படம் பேசும் கதையை, கதாபாத்திரத்தின் உணர்வை 2 வரிகளில் எழுதி விடுவார். அதனால்தான் அவரை தேடி தயாரிப்பாளர்களும், இயக்குனர்கள், எம்ஜிஆர் சிவாஜி போன்ற நடிகர்களும் சென்றனர்.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் – வைரமுத்து சண்டைக்கு இதுதான் காரணமா?.. வாலி போல இவர் வரவே மாட்டாரா?.

அதேநேரம், திரையுலகில் புதிய பாடலாசிரியர்கள் எப்போதும் வந்து கொண்டுதான் இருப்பார்கள். மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலரும் கண்ணதாசனுக்கு போட்டியாக வந்தனர். அதேபோல்தான் கவிஞர் வாலியும் வந்தார். அவரின் வரிகளும் பலருக்கும் பிடித்திருந்தது.

சில பாடல்களை கண்ணதாசன் எழுதாமல் போக அந்த பாடல்களை வாலி எழுதி அந்த வரிகளை கண்ணதாசனே பராட்டியும் இருக்கிறார். கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தபின் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு தொடர்ந்து வாலியே எழுதினார். அதன் மூலம் ரசிகர்களிடமு, திரையுலகிலும் அவர் புகழடைந்தார்.

vaali

vaali

அப்போது பிரபலமாக இருந்த ஒரு பத்திரிக்கையில் வாசகர் கேள்வியில் ஒருவர் ’கண்ணதாசன் இடத்தை வாலி பிடிப்பாரா?’ என கேட்டிருக்க, அதற்கு பதிலளித்த பத்திரிக்கை ஆசிரியர் ‘கண்ணதாசன் யானை.. வாலி கொசு’ என பதிலளித்திருந்தார். அதைப்படித்த வாலி அமைதியாக இருந்தார்.

இதையும் படிங்க: அவர் மேல எந்த தப்பும் இல்ல!.. நான்தான் காரணம்!.. வாலிக்காக பழியை ஏற்றுகொண்ட எம்.எஸ்.வி..

எம்.ஜி.ஆர் நடித்த ‘இன்று போல் என்றும் வாழ்க’ படத்தின் 100வது நாள் விழா நடந்தபோது வாலி அதில் கலந்துகொண்டார். அவரின் அருகே அந்த பத்திரிக்கை ஆசிரியர் வந்து அமர்ந்தார். ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். ஆசிரியர் வாலியிடம் ‘கண்ணதாசனை யானை என்றும் உங்களை கொசு என்றும் எழுதியிருந்தேன். அதனால், என் மீது உங்களுக்கு வருத்தமா?’ என கேட்டுள்ளார்.

அதற்கு வாலி ‘வருத்தம் இல்லை. ஆனால் ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். கொசு கடித்தால் யானைக்கால் வரும்’ என்றார். உடனே அந்த ஆசிரியர் வாலியின் கையை பிடித்துக்கொண்டு ‘இனிமேல் உங்கள் மீது உள்ள எண்ணத்தை நான் மாற்றிக்கொள்கிறேன்’ என்று சொன்னார். இப்படி பல சந்தர்பங்களில் வார்த்தைகளை சாமார்த்தியமாக பயன்படுத்தி அசத்தியவர்தான் வாலி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளையராஜா போட்ட மெட்டையே பாடலாக்கிய கவிஞர் வாலி.. என்ன பாடல் தெரியுமா?

Next Story