‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் இருந்த பிரச்சினை! கேஸ் போட சொன்ன விஜயகாந்த்.. இதுதான் நடந்தது
Vettaiyadu Vilaiyadu: கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார். படம் பூஜை போட்டதிலிருந்து ஏகப்பட்ட பிரச்சனைகளுடன் தான் டிராவல் செய்தது. முதலில் இந்த படத்தை ரோஜா கம்பைன்ஸ் நிறுவனர் காஜாமைதீன் தயாரிக்க இருந்தார்.
அந்த நேரத்தில் அவர் ஏகப்பட்ட கடனில் சிக்கியதால் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். இதை அறிந்த மாணிக்கம் நாராயணன் அவரை போய் பார்க்க இந்த வேட்டையாடு விளையாடு படத்தை பற்றி காஜா மைதீன் மாணிக்கம் நாராயணனிடம் சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தை நீயே எடு என்றும் மாணிக்கம் நாராயணனிடம் சொல்ல இவர் முதலில் தயங்கி இருக்கிறார்.
அந்த நேரத்தில் மாணிக்கம் நாராயணனிடம் ஏகப்பட்ட பணம் அவருடைய அக்கவுண்டில் இருந்ததால் சரி நாளைக்கு பதில் சொல்கிறேன் என வந்து விட்டாராம். ஆனால் அதற்குள் வேட்டையாடு விளையாடு படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரிக்க இருக்கிறார் என்ற செய்தி தமிழ் திரை உலகம் முழுவதும் பரவி விட்டதாம். அதன் பிறகு பல ஊர்களில் இருந்து விநியோகஸ்தர்கள் மாணிக்கம் நாராயணனுக்கு போன் செய்து வாழ்த்துக்களை சொல்லி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: பல்லாங்குழியாடும் சூரரைப் போற்று பொம்மி!.. ஆரஞ்சு சேலையில் ஆட்டி படைக்கும் அபர்ணா பாலமுரளி!..
சரி இதன் பிறகு விலக முடியாது என நேராக அலுவலகத்திற்கு வந்திருக்கிறார். அப்போது கௌதம் மேனன் இவரிடம் ‘சார் இப்ப கூட ஒன்னும் இல்லை. இந்த படத்தில் இருந்து நீங்கள் விலக வேண்டும் என நினைத்தால் விலகிக் கொள்ளலாம். ஏனெனில் நாங்களும் இந்த படத்தில் இருந்து மொத்தமாக விலகலாம் என நினைக்கிறோம்’ என சொல்லி இருக்கார். இருந்தாலும் மாணிக்கம் நாராயணன் ‘இல்ல சார் நான் இந்த படத்தை எடுக்கிறேன். என துணிந்து வந்திருக்கிறார்.
அதன் பிறகு இந்த படம் மாணிக்கம் நாராயணனிடம் சென்று இருக்கிறது. இப்படித்தான் காஜா மைதீனை மாணிக்கம் நாராயணன் காப்பாற்றியதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஆனால் காஜா மைதீன் இவரிடம் ‘இந்த கதை எல்லாம் பத்திரிகைகளில் சொல்லி என்னை அவமானப்படுத்தாதே’ என முகத்திற்கு எதிராக சொல்லிவிட்டாராம். இதைக் குறிப்பிட்டு பேசிய மாணிக்கம் நாராயணன் காஜா மைதீன் எனக்கு பல கோடி ரூபாய் தர வேண்டும்.
இதையும் படிங்க: யாருக்கும் தெரியாத எம்.ஆர்.ராதாவை பற்றிய ஒரு ரகசியம்! எம்ஜிஆரையே மிரள வைத்த நடிகவேள்
ஆனால் அவரிடமிருந்து சில லட்சங்களை மட்டுமே பெற்றுக்கொண்டு செட்டில்மெண்டை முடித்து கொண்டேன். அவரை ஜெயிலில் வைத்து என்ன பிரயோஜனம்? கேஸ் போட்டேன். அதுவும் விஜயகாந்த் சொல்லி அவர் மீது கேஸ் போட்டேன். அதற்காக அவர் குடும்பத்தை அழிக்க வேண்டும் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் இன்று காஜா மைதீன் 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு நான் தான் காரணம். அது எனக்கு பெருமையாக இருக்கிறதே தவிர பொறாமையில் சொல்லவில்லை என மாணிக்கம் நாராயணன் கண்ணீர் மல்க ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.