அத மட்டும் நான் எப்பவுமே செய்ய மாட்டேன்!.. சிவகார்த்திகேயனுக்கு வாக்கு கொடுத்த விஜய்!..

by சிவா |
vijay
X

நாளைய தீர்ப்பு என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் விஜய். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனால் சினிமாவுக்கு வந்தவர். அதன்பின் ரசிகன், தேவா, விஷ்ணு, கோயம்பத்தூர் மாப்ளே என சில படங்களில் நடித்தார். இதில் ரசிகன் மட்டுமே ஓரளவுக்கு ஓடியது.

அதன்பின் விஜையை மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கவைக்க எஸ்.ஏ.சந்திரசேகர் எவ்வளவோ முயற்சி செய்தார். ஒன்றும் நடக்கவில்லை விஜயகாந்த் மட்டும் செந்தூரப்பாண்டி நடித்து கொடுத்தார். தேவா படத்தில் விஜயின் துள்ளலான நடிப்பை பார்த்த இயக்குனர் விக்ரமன் அவர் இயக்கிய பூவே உனக்காக படத்தில் அவரை நடிக்க வைத்தார்.

இதையும் படிங்க: அஜித்லாம் பேசவே மாட்டாரு! விஜய் வெட்கப்படுவாரு.. 90களில் குத்தாட்டம் போட்ட நடிகை சொன்ன சீக்ரெட்

அந்த படம் விஜய்க்கு பல பெண் ரசிகைகளை பெற்று தந்தது. மேலும், அவரை வைத்து படம் எடுக்கலாம் என்கிற நம்பிக்கை மற்ற தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வந்தது. இப்படித்தான் விஜய் டேக் ஆப் ஆனார். துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

அதன்பின் ஆக்‌ஷன் படங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் தன்னை மாஸ் நடிகராக காட்டிக்கொண்டு இளைய தளபதியாக மாறி இப்போது தளபதியாகவும் மாறிவிட்டார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி இருக்கிறார். இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: விஜய்க்கு தமிழில் ‘க்’ தெரியாது!.. அவரோட பையனுக்கு தமிழே தெரியாது… கலாய்த்த பிரபலம்…

ஒருபக்கம் தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் சொல்லி இருக்கிறார். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் இதுவரை 68 படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், அப்பாவை போல இயக்குனராக வேண்டும் என்கிற ஆசை வந்ததே இல்லை.

ஒருமுறை நடிகர் சிவகார்த்த்கேயன் டிவியில் விஜே-வாக இருந்தபோது விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது ‘இயக்குனராகும் ஆசை இருக்கிறதா?’ என அவர் விஜயிடம் கேட்டார். அதற்கு பதில் சொன்ன விஜய் ‘ எனக்கு அந்த ஆசையே இல்லை. அது டென்ஷன் பிடித்த வேலை. நானோ ரொம்பவும் கூல். எனக்கு அது செட்டே ஆகாது. எனவே, எப்போதும் அதை செய்யவே மாட்டேன்’ என பதில் சொல்லி இருந்தார். கூறியது போலவே இப்போதுவரை இயக்கம் பக்கம் விஜய் போகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் மீது இம்புட்டு பாசமா!.. தென்காசி கோயிலில் சமுத்திரகனி சொன்ன வார்த்தை.. ரசிகர்கள் செம ஹேப்பி!

Next Story