என்னங்க இப்படி பொசுக்குனு பண்ணிட்டீங்க.. விக்னேஷ் சிவனின் திடீர் முடிவு!...

by Akhilan |
vignesh shivan
X

vignesh shivan

Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன் எடுத்திருக்கும் திடீர் முடிவால் நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

கோலிவுட்டில் பிரபல இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

இதையும் படிங்க: விஜய் கட்சிக்கு அஜீத் ஆதரவு… சிம்பாலிக்கா சொல்லி தெறிக்க விட்டுட்டாரே…!

இது ஒரு புறம் இருக்க நடிகை நயன்தாராவை சில வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். பல நாள் காத்திருப்பதற்குப் பின்னர் நெருங்கிய வட்டாரத்தின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட தம்பதி தங்களுடைய திருமணத்தை நடத்தி விற்பனை செய்தனர்.

சமீபத்தில் இந்த திருமண டாக்குமெண்டரி வெளியாகியது. ஆனால் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்படாமல் வெளியாக இருந்த இதற்கு நயன்தாரா தனுஷ் மீது குற்றச்சாட்டை வைத்து வெளியிட்ட ஒற்றை கடிதம் மிகப்பெரிய பிரமோஷன் ஆக அமைந்தது. தொடர்ந்து கணவர் விக்னேஷ் சிவனும் தனுஷை சாடி பல பதிவுகளை போட்டு இருந்தார்.

இதையும் படிங்க: ‘கிளைமாக்ஸ் புடிக்கல’.. சூப்பர் படத்தை ‘மிஸ்’ பண்ணிய விஜய்..

சில நாட்களில் அவர் தன்னுடைய பதிவுகளை நீக்கிவிட்டார். அப்போதே அது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர். இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய எக்ஸ் கணக்கையும் டிஆக்டிவேட் செய்திருக்கிறார். இதற்கு பெரிய அளவில் காரணம் கூறப்படவில்லை. ஆனால் நயன்தாரா மற்றும் தனுஷ் இடையேயான பஞ்சாயத்தில் அதிக அளவில் விக்னேஷ் சிவன், ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

vignesh  shivan

vignesh shivan

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்த பேன் இந்தியா டைரக்டர் ரவுண்டு டேபிள் பேட்டியில் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டிருந்தார். இவரை எதற்கு இந்த பேட்டிக்கு அழைத்தீர்கள் என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பியதும் இந்த டிஆக்டிவேட் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Next Story