கோட் படத்துல விஜய்க்கு இப்படி ஆகிடும்!.. வெளியான போட்டோ!.. ஷாக்கான தளபதி ஃபேன்ஸ்!...
Goat: நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் திரைப்படம் கோட். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதோடு ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜயை மிகவும் இளமையாக காட்டவிருக்கிறார்கள்.
இதற்காக படம் துவங்குவதற்கு முன்பே விஜய், வெங்கட்பிரபு ஆகியோர் அமெரிக்கா சென்று அங்குள்ள ஸ்டுடியோவில் இதற்கான வேலையை துவங்கினார். இப்போது கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய், மீனாக்ஷி சேஷாத்திரி, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: ஒருத்தர் கூட வாங்கலயே!.. லால் சலாம் படத்துக்கு இப்படி ஒரு நிலமையா?!.. ஐயோ பாவம்…
விஜய் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் ஒரு பக்கா ஆக்சன் படமாக இப்படம் உருவாகி வருகிறது. வெளிநாடுகளிலும் சில ஆக்சன் காட்சிகளை எடுக்க வெங்கட்பிரபு திட்டமிட்டிருக்கிறார். இப்போது சென்னை, புதுச்சேரி என பல இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
எனவே, விஜயை பார்க்க அவரின் ரசிகர்கள் அடிக்கடி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு போவதும் விஜய் அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படி விஜய் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்திலும் வைரலானது.
இதையும் படிங்க: அப்பாவோட மாஸ மொத்தமா சரித்து விட்ட ஐஸ்வர்யா!.. 2ம் நாளில் காலியான லால் சலாம்!..
இந்நிலையில், கோட் படம் தொடர்பாக ஒரு புதிய படம் வெளியாகி விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் ராணுவ வீரர் என்றும் போரில் தனது வலது கையில் 2 விரல்களை இழந்துவிடுவார் எனவும் சொல்லப்படுகிறது.
இதற்காக ஹாலிவுட் ஸ்டைலில் பிராஸ்த்தெட்டிக்ஸ் மேக்கப்பை பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.