அந்த லட்சுமி யாருன்னு மட்டும் சொல்லிடாதீங்க!.. பிரஸ் ஷோ முடிந்ததும் விஜய் சேதுபதி கோரிக்கை!..

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ள மகாராஜா திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. வரும் ஜூன் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதனை முன்னிட்டு தற்போது பத்திரிகையாளர்களுக்கான பிரத்தியேக காட்சி இன்று திரையிடப்பட்டது.

பத்திரிகையாளர் காட்சியில் படத்தைப் பார்த்த பலரும் மகாராஜா படத்துக்கு பிளாக்பஸ்டர் படத்துக்கான ரெஸ்பான்ஸை சமூக வலைத்தளங்களில் கொடுத்து வருகின்றனர். பத்திரிகையாளர் காட்சி முடிந்த நிலையில் தேசிய நடிகர் விஜய் சேதுபதி, படத்தைப் பார்த்த யாரும் படத்தின் கிளைமாக்ஸ் குறித்து ரிவீல் செய்ய வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: புஷ்பா 2 வெளியே!.. சந்துல சிந்து பாடிய சியான் விக்ரம்!.. சுதந்திர தினத்துக்கு யாருக்கு ஜாக்பாட்?..

மகாராஜா படத்தின் ட்ரைலரில் லட்சுமியை விஜய் சேதுபதி தேடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள நட்டி நட்ராஜ் தொல்லை கொடுத்து வருவதாக காட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில், யார் அந்த லட்சுமி என்பதுதான் படத்தின் ஹைலைட் ட்விஸ்ட் ஆக உள்ளது எனக் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு விஜய் சேதுபதி அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக பாலிவுட்டில் நடித்து மாஸ் காட்டினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு ஜோடியாக மெரி கிறிஸ்துமஸ் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இதையும் படிங்க: பொதுவா வீட்ல இருக்கும் ஃபிரிஜ்ஜில் என்ன இருக்கும்? ஆனால் இந்த நடிகை என்ன வச்சிருந்தாங்க தெரியுமா?

ஆனால் அந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் வந்த சுவடே தெரியாமல் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் ஆவது அவருக்கு கை கொடுக்கும் என பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்தில் அவருக்கு வில்லனாக பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். மேலும், அபிராமி, பாரதிராஜா மற்றும் மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மகாராஜா படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார்.

இதையும் படிங்க: தளபதி 69 படம் டிராப்பா?!.. கோட் முடிஞ்சவுடனே நேரா அரசியலா?!.. என்னதாம்பா நடக்குது!..

 

Related Articles

Next Story