அடங்காத ரசிகர்களின் அட்ராசிட்டி.. ஆடியோ ரிலீஸுக்கு வேற பிளான் போட்ட விஜய்!….

Published on: August 14, 2023
---Advertisement---

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை எப்போதும் போல இந்தியாவில் நடத்தாமல் வெளிநாட்டில் தான் நடத்த வேண்டும் என விஜய் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியினை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லியோ. இப்படத்தில் விஜய் அவருக்கு ஜோடியாக த்ரிஷா, சஞ்சய் தத் மட்டுமல்லாமல் மிகப்பெரிய பிரபலங்கள் பட்டாளமே நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தில் கமலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருந்தது.

இதையும் படிங்க: நயன்தாராவை என்னம்மா தூக்கி சுத்துறாரு ஷாருக்கான்!.. இருந்தாலும் அட்லீ இப்படி துரோகம் பண்ணக்கூடாது!..

இந்நிலையில் கோலிவுட்டில் ஏற்கனவே ஒரு பிரச்னை விஜய் மீது எழுந்திருக்கிறது. அதற்கு ரஜினி ஜெய்லர் ஆடியோ லான்ச்சில் பேசியது என பரபரப்பாகி இருக்கிறது. இதற்கிடையில் லியோ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல அட்லீதான் கில்லி.. அவர மிஞ்ச வேற ஆளே கிடையாது.. வெளிபடையாக சொன்ன டிடி

மதுரையில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் ஒரு இடத்தில் நடத்தலாம் என திட்டமிடப்பட்டு இருந்தனர். ஆனால் விஜய் இந்தியாவில் நடத்த வேண்டாம். மலேசியாவில் நடத்துங்கள் எனக் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதுகுறித்து விசாரிக்கும் போது ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வர இருக்கிறார். அதனால் தான் சில விஷயங்கள் பேசுகிறார் என பலரும் கிசுகிசுக்கின்றனர்.

இந்த நேரத்தில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் யாரும் யோசிக்காமல் அரசின் கோவத்தினை கிளறும் வகையில் ஆரவாரம் செய்து அது படத்தின் ரிலீஸை பாதிக்க கூடாது என்பதற்கே இந்த முடிவினை விஜய் எடுத்து இருக்கிறார். காந்தி ஜெயந்தி விடுமுறை நாளில் சன் டிவியில் இந்த நிகழ்ச்சியினை ஒளிபரப்பும் வகையில் விரைவில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.